ரியல்மி நிறுவனத்தின் புதிய கியூ சீரிஸ் ஸ்மார்ட்போன் அக்டோபர் மாத வாக்கில் அறிமுகமாகும்!

ரியல்மி யுஐ 2.0 கொண்ட புதிய ஸ்மார்ட்போன் அக்டோபர் மாத வாக்கில் அறிமுகமாகும் என ரியல்மி துணை  தலைவர் தெரிவித்து இருந்தார். இந்நிலையில், புதிய ரியல்மி ஸ்மார்ட்போன் கியூ சீரிஸ் பிராண்டிங் கொண்டிருக்கும் என தகவல் வெளியாகி உள்ளது.

மேலும் ரியல்மி கியூ சீரிஸ் ஸ்மார்ட்போன் அக்டோபர் 13 ஆம் தேதி அறிமுகமாகும் என்றும் கூறப்படுகிறது. புதிய ஸ்மார்ட்போன் பற்றி ரியல்மி சார்பில் இதுவரை எந்த தகவலும் வழங்கப்படவில்லை.

முன்னதாக RMX2173 மற்றும் RMX2117 எனும் மாடல் நம்பர்கள் கொண்ட இரு ரியல்மி ஸ்மார்ட்போன் TENAA வலைதளத்தில் சான்று பெற்று இருந்தன. இதில் RMX2176 சிறப்பம்சங்கள் ரியல்மி எக்ஸ்7  மாடலில் இருந்ததை போன்றே கொண்டிருக்கிறது.
இதனால் RMX2176 மாடல் நம்பர் கொண்ட ஸ்மார்ட்போன் ரியல்மி எக்ஸ்7 லைட் எனும் பெயரில் அறிமுகமாகும் என கூறப்படுகிறது. இரு மாடல்களிலும் கேமரா மட்டும் வேறுபடும் என தெரிகிறது. RMX2173 மாடல் நம்பர் கொண்ட ஸ்மார்ட்போன் ரியல்மி கியூ சீரிசில் வெளியாகும் என கூறப்படுகிறது.
முன்னதாக 2019 ஆண்டில் ரியல்மி கியூ மாடல் அறிமுகம் செய்யப்பட்டு, பின் அது ரியல்மி 5 ப்ரோ என ரி-பிராண்டு செய்யப்பட்டது. இதன் காரணமாக புதிய கியூ சீரிஸ் மாடல் ரியல்மி கியூ2 எனும் பெயரில் அறிமுகமாகும் என தெரிகிறது. எனினும், இதுபற்றி அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் வெளியாகவில்லை.