சோனி நிறுவனத்தின் வயோ பிராண்டு லேப்டாப்கள் இந்தியாவில் மீண்டும் அறிமுகம் செய்யப்பட இருக்கின்றன. முன்னதாக இதன் வருகையை ப்ளிப்கார்ட் தனது வலைதளத்தில் அறிவித்து இருந்தது.
அந்த வகையில் தற்சமயம் வயோ பிராண்டு தனது புதிய லேப்டாப் இந்தியாவில் ஜனவரி 15 ஆம் தேதி அறிமுகமாகும் என அறிவித்து இருக்கிறது. முதற்கட்டமாக வயோ லேப்டாப்கள் ப்ளிப்கார்ட் தளத்தில் மட்டும் பிரத்யேகமாக விற்பனை செய்யப்பட இருக்கின்றன.
Related Posts

`வயோ பிராண்டை மீண்டும் அறிமுகம் செய்ய முன்னணி ஆன்லைன் தளத்துடன் இணைந்து செயல்பட ஆவலாக இருக்கிறோம். எதிர்கால லேப்டாப் மாடல்களை அசத்தல் அம்சங்களை அறிமுகம் செய்ய இருக்கிறோம். இவை நாட்டின் இளம் வாடிக்கையாளர்களை கவரும் வகையில் இருக்கும்.’
`தலைசிறந்த லேப்டாப்களை அறிமுகம் செய்வதன் மூலம் சந்தையில் தனது இடத்தை பிடிப்பதில் கவனமாக இருக்கிறோம். நாட்டில் லேப்டாப் வாங்குவோரின் முக்கிய தேர்வாக உருமாறும் தருணத்தை ஆவலுடன் எதிர்நோக்குகிறோம்.’ என வயோ பிராண்டு வியாபார பிரிவு இயக்குனர் சீமா பட்நகர் தெரிவித்தார்.