அறிமுகம் ஒடிடி பலன்களுடன் ஜியோ போஸ்ட்பெயிட் பிளஸ் சலுகைகள் .

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் புது ஜியோ ஃபைபர் சலுகைகளை தொடர்ந்து தற்சமயம் ஜியோ போஸ்ட்பெயிட் பிளஸ் சலுகைகளை அறிமுகம் செய்து இருக்கிறது. புதிய போஸ்ட்பெயிட் பிளஸ் சலுகைகளில் பல்வேறு ஒடிடி சேவைகளுக்கான சந்தா வழங்கப்படுகிறது.
போஸ்ட்பெயிட் பிளஸ் சலுகைகள் மூலம் தலைசிறந்த கனெக்டிவிட்டி, பொழுதுபோக்கு மற்றும் அனுபவத்தை வழங்க இருப்பதாக ரிலையன்ஸ் ஜியோ தெரிவித்து உள்ளது.
ஜியோ போஸ்ட்பெயிட் பிளஸ் சலுகைகள் ரூ. 399 மாத கட்டணத்தில் துவங்குகிறது. இதில் 75 ஜிபி டேட்டா மற்றும் 200 ஜிபி வரை டேட்டா ரோல் ஓவர் வழங்கப்படுகிறது. ரூ. 599 சலுகையில் 100 ஜிபி டேட்டா, 200 ஜிபி டேட்டா ரோல் ஓவர், கூடுதலாக ஒரு சிம் கார்டு மற்றும் ஃபேமிலி பிளான் வழங்கப்படுகிறது.
ரூ. 799 சலுகையில் 150 ஜிபி டேட்டா, 200 ஜிபி டேட்டா ரோல் ஓவர், கூடுதலாக இரு சிம் கார்டுகள், ஃபேமிலி சலுகைகள் வழங்கப்படுகின்றன. ரூ. 999 சலுகையில் 200 ஜிபி டேட்டா, மூன்று சிம் கார்டுகள், ரூ. 1499 சலுகையில் 300 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது.
அனைத்து சலுகைகளுடன் அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், எஸ்எம்எஸ், நெட்ப்ளிக்ஸ், அமேசான் பிரைம் மற்றும் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் விஐபி சந்தா வழங்கப்படுகிறது.