சியோமிக்கு போட்டியாக புது பிட்னஸ் பேண்ட் அறிமுகம் செய்யும் ஒன்பிளஸ்

ஒன்பிளஸ் நிறுவனம் அணியக்கூடிய சாதனங்கள் பிரிவில் களமிறங்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இதற்கென ஒன்பிளஸ் நிறுவனம் புதிய ஒன்பிளஸ் பேண்ட் சாதனத்தை உருவாக்கி வருவதாக கூறப்படுகிறது.

புதிய ஒன்பிளஸ் பேண்ட் சியோமி எம்ஐ பேண்ட் 5 சாதனத்திற்கு போட்டியாக அமையும் என தெரிகிறது. முதற்கட்டமாக இந்திய சந்தையில் அறிமுகமாகி அதன்பின் மற்ற நாடுகளில் இந்த பேண்ட் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

 கோப்புப்படம்
இந்திய சந்தையில் ஒன்பிளஸ் பேண்ட் ரூ. 3 ஆயிரம் பட்ஜெட்டில் அறிமுகம் செய்யப்படும் என்றும் இதில் AMOLED டிஸ்ப்ளே, பல நாட்கள் பேக்கப் வழங்கும் பேட்டரி, வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி உள்ளிட்ட அம்சங்கள் வழங்கப்படலாம் என கூறப்படுகிறது.
ஒன்பிளஸ் நிறுவனம் கூகுள் நிறுவனத்துடன் இணைந்து வியர் ஒஎஸ் தளத்தை மேம்படுத்தும் பணிகளிலும் ஈடுபட்டு வருகிறது. அந்த வகையில் ஒன்பிளஸ் வாட்ச் மாடலிலும் கூகுள் பிளாட்பார்ம் கொண்டிருக்குமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

 

x