அசத்தல் விலை குறைப்பு அறிவித்த சாம்சங்

சாம்சங் நிறுவனம் தனது கேலக்ஸி எம்01 மற்றும் கேலக்ஸி எம்01எஸ் மற்றும் கேலக்ஸி பட்ஸ் இயர்போன் விலையை குறைப்பதாக அறிவித்து இருக்கிறது. இரு கேலக்ஸி எம் சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் மட்டுமின்றி கேலக்ஸி பட்ஸ் பிளஸ் மற்றும் கேலக்ஸி பட்ஸ் லைவ் வயர்லெஸ் இயர்போன் விலையும் குறைக்கப்பட்டு இருக்கிறது.

விலை குறைப்பின் படி சாம்சங் கேலக்ஸி எம்01 விலை ரூ. 500 குறைக்கப்பட்டு தற்சமயம் ரூ. 7499 என்றும் கேலக்ஸி எம்01எஸ் விலை ரூ. 1499 குறைக்கப்பட்டு தற்சமயம் ரூ. 8999 என்றும் மாறி இருக்கிறது. இரு மாடல்களின் புதிய விலை ஆன்லைன் மற்றும் ஆப்லைன் தளங்களில் மாற்றப்பட்டு விட்டது.

 கேலக்ஸி பட்ஸ் லைவ்
இதேபோன்று  கேலக்ஸி பட்ஸ் பிளஸ் ரூ. 8,990 என்றும் விலை ரூ. 11,990 என மாறி இருக்கிறது. இரு இயர்போன்களின் விலையும் முறையே ரூ. 3 ஆயிரம் குறைக்கப்பட்டு இருக்கிறது. இவற்றின் புது விலை ஆப்லைன் சந்தையில் மாற்றப்பட்டு விட்டதாக கூறப்படுகிறது.
முன்னதாக சாம்சங் நிறுவனம் தனது கேலக்ஸி ஏ31 ஸ்மார்ட்போனின் விலையை குறைத்தது. இந்த ஸ்மார்ட்போன் தற்சமயம் ரூ. 17,999 எனும் விலையில் விற்பனை செய்யப்படுகிறது.
x