இணையத்தில் லீக் ஆன இரு நோக்கியா ஸ்மார்ட்போன் விவரங்கள்

ஹெச்எம்டி குளோபல் நிறுவனத்தின் நோக்கியா 6.3 மற்றும் நோக்கியா 7.3 ஸ்மார்ட்போன் விவரங்கள் இணையத்தில் வெளியாகி வருகின்றன. அதன்படி இரு மாடல்களில் 4500 எம்ஏஹெச் மற்றும் 5000 எம்ஏஹெச் பேட்டரிகளை கொண்டிருக்கும் என தெரிகிறது.

தற்சமயம் இரு ஸ்மார்ட்போன் மாடல்களுக்கான பேட்டரி மாடல்கள் டியுவி ரெயின்லாந்து வலைதளத்தில் வெளியாகி இருக்கிறது. அதன்படி 4500mAh பேட்டரி CN110 எனும் மாடல் நம்பரும், 5000mAh பேட்டரி WT340 எனும் மாடல் நம்பரை கொண்டு உருவாகி இருக்கிறது.

 நோக்கியா ஸ்மார்ட்போன்
இரு பேட்டரிகளும் பாஸ்ட் சார்ஜிங் வசதியை கொண்டிருக்குமா என்பது குறித்து எந்த தகவலும் இடம்பெறவில்லை. இதுவரை ஹெச்எம்டி குளோபல் நிறுவனம் நோக்கியா 6.3 அல்லது நோக்கியா 7.3 ஸ்மார்ட்போன் மாடல்கள் பற்றி எந்த தகவலையும் வழங்கவில்லை. இரு புதிய மாடல்கள் இந்த ஆண்டு அறிமுகம் செய்யப்படலாம் என அதிகம் எதிர்பார்க்கப்பட்டது.
எனினும், இந்த ஸ்மார்ட்போன்கள் அடுத்த ஆண்டு துவக்கத்தில் அறிமுகம் செய்யப்படலாம் என கூறப்படுகிறது. முன்னதாக நோக்கியா 5.4 மற்றும் நோக்கியா சி1 பிளஸ் ஸ்மார்ட்போன் மாடல்களை ஐரோப்பிய சந்தையில் அறிமுகம் செய்தது.
x