குறைந்த விலை பிஎஸ்என்எல் சலுகை அறிவிப்பு

பிஎஸ்என்எல் ரூ. 199 பிரீபெயிட் சலுகை இந்தியாவில் அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இந்த சலுகையில் பயனர்களுக்கு 2 ஜிபி டேட்டா, தினமும் 100 எஸ்எம்எஸ், 250 நிமிடங்கள் வாய்ஸ் கால் உள்ளிட்டவை 30 நாட்கள் வேலிடிட்டியுடன் வழங்கப்படுகிறது.
புதிய சலுகை தவிர பிஎஸ்என்எல் ரூ. 998 விலை சலுகை பலன்களை மாற்றுவதாக அறிவித்து உள்ளது. அதன்படி பிஎஸ்என்எல் ரூ. 998 சலுகையில் தினமும் 3 ஜிபி டேட்டா, வழங்கப்படுகிறது. முன்னதாக இந்த சலுகையில் தினமும் 2 ஜிபி டேட்டா வழங்கப்பட்டு இருந்தது. 
 கோப்புப்படம்
பிஎஸ்என்எல் ரூ. 998 விலை சலுகை 240 நாட்கள் வேலிடிட்டி கொண்டது ஆகும். இந்த சலுகை மாற்றம் பிஎஸ்என்எல் கேரளா வட்டாரத்திற்கான ட்விட்டர்பக்கத்திலும், ரூ. 199 பிஎஸ்என்எல் சலுகை அறிவிப்பு ராஜஸ்தான் வட்டாரத்திற்கான ட்விட்டர் பக்கத்திலும் குறிப்பிடப்பட்டு உள்ளது.
அந்த வகையில் புதிய பிஎஸ்என்எல் ரூ. 199 சலுகை மற்றும் ரூ. 998 சலுகை மாற்றம் அந்தந்த வட்டாரங்களில் முதற்கட்டமாக வழங்கப்படுகிறது. விரைவில் இவை நாடு முழுக்க அனைத்து வட்டாரங்களிலும் வழங்கப்படலாம் என கூறப்படுகிறது.
x