இந்தியாவில் அறிமுகம் ரூ. 12,999 விலையில் அமேஸ்பிட் ஜிடிஎஸ்2 ஸ்மார்ட்வாட்ச்

ஹூவாமி நிறுவனம் இந்தியாவில் அமேஸ்பிட் ஜிடிஎஸ்2 ஸ்மார்ட்வாட்ச் மாடலை அறிமுகம் செய்தது. புதிய அமேஸ்பிட் ஜிடிஎஸ் 2 ஸ்மார்ட்வாட்ச் 1.65 இன்ச் AMOLED ஸ்கிரீன், ஹெச்டி ரெசல்யூஷன், அலுமினியம் பாடி, 3டி கார்னிங் கொரில்லா கிளாஸ், ஸ்கிராட்ச் ரெசிஸ்டண்ட் வசதி கொண்டிருக்கிறது.
மேலும் இதில் 50-க்கும் அதிக வாட்ச் பேஸ்கள், spo2 மாணிட்டரிங், ஜிபிஎஸ் வசதி, 90-க்கும் அதிக ஸ்போர்ட்ஸ் மோட்கள் வழங்கப்பட்டு உள்ளன. இதுதவிர புதிய ஸ்மார்ட்வாட்ச் மாடலில் பல்வேறு அசத்தலான அம்சங்கள் வழங்கப்பட்டு உள்ளன.
 அமேஸ்பிட் ஜிடிஎஸ் 2
அமேஸ்பிட் ஜிடிஎஸ் 2 சிறப்பம்சங்கள்
– 1.65 இன்ச் 348X442 பிக்சல் AMOLED 341PPI ஸ்கிரீன்
– 3D கிளாஸ்
– ஆண்ட்ராய்டு 5.0 அல்லது ஐஒஎஸ் iOS 10.0 மற்றும் அதற்கும் பின் வெளியான ஒஎஸ் வசதி
– 90-க்கும் அதிக ஸ்போர்ட்ஸ் மோட்கள்
– ஆக்டிவிட்டி டிராக்கிங், ஸ்டெப் கவுண்ட்
– ஹூவாமி உருவாக்கிய பயோ டிராக்கர்
– அலுமினியம் அலாய் + பிளாஸ்டிக் பாடி
– வாட்டர் ரெசிஸ்டண்ட் (5ATM / 50 Meters)
– ப்ளூடூத் 5.0 LE, வைபை, ஜிபிஎஸ்
– 3 ஜிபி மெமரி
– மைக்ரோபோன்
– 246mAh பேட்டரி
அமேஸ்பிட் ஜிடிஎஸ் 2 ஸ்மார்ட்வாட்ச் மிட்நைட் பிளாக் நிறத்தில் கிடைக்கிறது. இதன் விலை ரூ. 12,999 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. விற்பனை அமேசான் தளத்தில் நடைபெறுகிறது.
x