அறிமுகம் ஒன்பிளஸ் 8டி கான்செப்ட் ஸ்மார்ட்போன்

ஒன்பிளஸ் நிறுவனத்தின் புதிய ஒன்பிளஸ் 8டி கான்செப்ட் ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. இந்த கான்செப்ட் போனின் பேக் பேனல் வித்தியாசமாக வடிவமைக்கப்பட்டு உள்ளது. மேலும், இதில் ரியாக்டிவ் சென்சிங் எனும் தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது.
இது எம்எம்வேவ் சென்சிங் தொழில்நுட்பத்தின் உதவியுடன் பேக் பேனல் நிறத்தை டார்க் புளூ-வில் இருந்து சில்வர் நிறத்திற்கு தானாக மாற்றும். ஸ்மார்ட்போனில் நோட்டிபிகேஷன் வரும் போது இந்த அம்சம் இயங்குகிறது. இத்துடன் பிரீத்திங் மாணிட்டர் எனும் அம்சத்தை ஒன்பிளஸ் அறிவித்து உள்ளது.
 ஒன்பிளஸ் 8டி கான்செப்ட் போன்
இந்த அம்சமும் 5ஜி-யின் அங்கமான எம்எம்வேவ் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி பயனர் மூச்சுவிடுவதை டிராக் செய்து பேக் பேனல் நிறத்தை அதற்கு ஏற்ற வகையில் மாற்றுகிறது. புதிய கான்செப்ட் போன் ஒன்பிளஸ் 8டி மாடலை விட அதிக வித்தியாசங்கள் இன்றி உருவாக்கப்பட்டு உள்ளது.