மேக்ஒஎஸ் பிக் சர் 11.1 அப்டேட் வெளியீடு

ஆப்பிள் நிறுவனம் மேக்ஒஎஸ் பிக் சர் 11.1 அப்டேட் வெளியிட்டு இருக்கிறது. கடந்த மாதம் மேக்ஒஎஸ் பிக் சர் ஒஎஸ் கடந்த மாதம் அறிமுகம் செய்யப்பட்டது. புது அப்டேட் ஏர்பாட்ஸ் மேக்ஸ் ஒவர்-இயர் ஹெட்போனிற்கான சப்போர்ட் வழங்குகிறது.
மேலும் ஆப் ஸ்டோர் பிரைவசி லேபில், ஆப்பிள் நியூஸ் விட்ஜெட்கள், மேம்பட்ட போட்டோஸ் ஆப் மற்றும் ஆப்பிள் ப்ரோரா புகைப்படங்களை எடிட் செய்யும் வசதியை வழங்குகிறது. இத்துடன் காற்றின் தரம் சார்ந்த ஆரோக்கிய விவரங்கள் வெதர் மற்றும் சிரி சேவையில் வழங்கப்படுகிறது.
 மேக்ஒஎஸ் பிக் சர்
மேக்ஒஎஸ் 11 பிக் சர் வெளியானது முதல் ஆப்பிள் வெளியிட்ட பெரும் அப்டேட் இது ஆகும். இதில் மேம்பட்ட இன்டர்பேஸ், மெனு பார், சைடு பார், மேம்பட்ட டாக், ஆப் ஐகான் மற்றும் கண்ட்ரோல் சென்ட்டர் வழங்கப்பட்டு இருக்கிறது. புதிய அம்சங்கள் தவிர மேக் தளத்தின் பக் சரி செய்யப்பட்டு இருக்கிறது.
புதிய மேக்ஒஎஸ் பிக் சர் 11.1 அப்டேட் பெற பயனர்கள் முதலில் சீரான வைபை இணைப்பில் இணைந்து கொள்ள வேண்டும். பின் சிஸ்டம் பிரிபெரன்ஸ் செயலியில் சாப்ட்வேர் அப்டேட் ஆப்ஷனை தேர்வு செய்ய வேண்டும்.
வழக்கமாக ஆப்பிள் நிறுவனம் மேக் ஒஎஸ் அப்டேட்களை தானாக அனுப்பிவிடும். ஒருவேளை அப்டேட் கிடைக்காத பட்சத்தில் இவ்வாறு செய்யலாம்.