பல்வேறு புது அம்சங்களுடன் ஐஒஎஸ் 14.3 வெளியீடு

ஆப்பிள் நிறுவனம் ஐஒஎஸ் 14.3 அப்டேட்டை வெளியிட்டு இருக்கிறது. இந்தியா உள்பட உலகம் முழுக்க ஐபோன்களுக்கு இந்த அப்டேட் வெளியிடப்பட்டு உள்ளது.
புது அப்டேட் ஆப்பிள் பிட்னஸ் பிளஸ் மற்றும் ஏர்பாட்ஸ் மேக்ஸ் வசதியை வழங்குகிறது. இத்துடன் ஐபோன் 12 ப்ரோ மாடலில் ஆப்பிள் ப்ரோ-ரா தரத்தில் புகைப்படங்களை எடுக்கும் வசதி மற்றும் ஆப் ஸ்டோர் பாதுகாப்பு விவரங்களை வழங்கி இருக்கிறது.
 வாட்ச்ஒஎஸ் 7.2
புது அம்சங்கள் மட்டுமின்றி ஐபோனில் ஒஎஸ் தரப்பில் இருந்து வந்த பிழைகள் சரிசெய்யப்பட்டு இருக்கின்றன. ஐஒஎஸ் மட்டுமின்றி வாட்ச் ஒஎஸ் 7.2 அப்டேட்டும் வெளியிடப்பட்டு உள்ளது. ஐஒஎஸ் 14.3 மற்றும் வாட்ச்ஒஎஸ் 7.2 அப்டேட் மூலம் ஆப்பிள் வாட்ச் சாதனத்தில் கார்டியோ பிட்னஸ் விவரங்களை பெற முடியும்.
ஐஒஎஸ் 14.3 மற்றும் வாட்ச்ஒஎஸ் 7.2 மூலம் ஆப்பிள் வாட்ச் பயனர்கள் தங்களின் உடலில் கார்டியோ பிட்னஸ் அளவு குறைந்தால் உடனடியாக அறிந்து கொள்ள முடியும். இதன் மூலம் நீண்ட காலத்திற்கு உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்திக் கொள்ளலாம் என ஆப்பிள் தெரிவித்து இருக்கிறது.
புதிய ஐஒஎஸ் 14.3 அப்டேட் பெற பயனர்கள் முதலில் சீரான வைபை இணைப்பில் இணைந்து கொள்ள வேண்டும். பின் செட்டிங்ஸ் — ஜெனரல் — சாப்ட்வேர் அப்டேட் போன்ற ஆப்ஷன்களை தேர்வு செய்ய வேண்டும். பின் ஐஒஎஸ் 14.3 ஆப்ஷனை தேர்வு செய்து டவுன்லோடு மற்றும் இன்ஸ்டால் பட்டனை க்ளிக் செய்ய வேண்டும்.