ஜியோவுடனான கூட்டணி அதற்கு உதவியாக இருக்கும் – மார்க் ஜூக்கர்பர்க்

ஜியோ பிளாட்பார்ம்ஸ் உடனான கூட்டணி மூலம் இந்தியாவில் இயங்கி வரும் பல லட்சம் சிறு வியாபாரங்களுக்கு உதவியாக இருக்க முடியும் என பேஸ்புக் நிறுவன தலைமை செயல் அதிகாரி மார்க் ஜூக்கர்பர்க் தெரிவித்து இருக்கிறார்.
இந்த தகவலை மார்க் ஜூக்கர்பர்க், பேஸ்புக் பியூவல் பார் இந்தியா 2020 நிகழ்வில் ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் குழும தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் முகேஷ் அம்பானியுடனான உரையாடலின் போது தெரிவித்தார்.
 ரிலையன்ஸ் ஜியோ
சிறு வியாபாரங்களுக்கு உதவி செய்வதே பேஸ்புக்கில் எங்களின் நோக்கம். இதற்கு இந்தியாவை தவிர சிறந்த இடம் இருக்க முடியாது என அவர் மேலும் தெரிவித்தார். இந்தியாவில் சுமார் 6 கோடிக்கும் அதிகமான சிறு வியாபாரங்கள் நடைபெற்று வருகின்றன. வேலைவாய்ப்புக்காக பல லட்சம் பேர் இவற்றை நம்பி இருக்கின்றனர்.
இந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் பேஸ்புக் நிறுவனம் ஜியோ பிளாட்பார்ம்ஸ்-இல் 9.99 சதவீத பங்குகளை வாங்க ரூ. 43,574 கோடி முதலீடு செய்வதாக அறிவித்தது.