இணையத்தில் லீக் ஆன ஒன்பிளஸ் 9 5ஜி புகைப்படங்கள்

ஒன்பிளஸ் நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்படும் ஒன்பிளஸ் 9 5ஜி ஸ்மார்ட்போனின் லைவ் படங்கள் இணையத்தில் வெளியாகி இருக்கின்றன. அதன்படி புதிய ஒன்பிளஸ் ஸ்மார்ட்போன் பிளாட் டிஸ்ப்ளே, பன்ச் ஹோல் கட்-அவுட் வழங்கப்படும் என கூறப்படுகிறது.
புது ஸ்மார்ட்போனுடன் ஒன்பிளஸ் 9 ப்ரோ மற்றும் ஒன்பிளஸ் 9இ போன்ற மாடல்களும் அறிமுகம் செய்யப்படலாம் என தெரிகிறது. ஒன்பிளஸ் நிறுவனம் தனது ஒன்பிளஸ் 9 சீரிஸ் மாடலில் வித்தியாசமான கேமரா செட்டப் வழங்கப்படுகிறது. இதில் மூன்று கேமரா சென்சார்களும், பிளாஷ் யூனிட் கேமரா மாட்யூலினுள் வழங்கப்படுகிறது.
 ஒன்பிளஸ் 8டி
இத்துடன் புது ஸ்மார்ட்போனில் வித்தியாசமான ஒன்பிளஸ் லோகோ காணப்படுகிறது. இது ப்ரோடோடைப் யூனிட் என்பதால் இந்த லோகோ வழங்கப்பட்டு இருக்கலாம் என கூறப்படுகிறது. தோற்றத்தில் ஸ்மார்ட்போனின் முன்புறம் ஒன்பிளஸ் 8டி போன்றே காட்சியளிக்கிறது.
புது ஸ்மார்ட்போனில் 6.55 இன்ச் புல் ஹெச்டி பிளஸ் 1080×2400 பிக்சல் டிஸ்ப்ளே, 120 ஹெர்ட்ஸ் ரிப்ரெஸ்ரீஷ் ரேட் வழங்கப்படும் என கூறப்படுகிறது. இத்துடன் ஹெச்டிஆர் வசதி, 4500 எம்ஏஹெச் பேட்டரி மற்றும் ஆண்ட்ராய்டு 11 ஒஎஸ் வழங்கப்படலாம் என தெரிகிறது.