ரெட்மி நோட் 9 ப்ரோ மேக்ஸ் வாங்குவோரில் இவர்களுக்கு மட்டும் சிறப்பு சலுகை

இந்தியாவில் ரெட்மி நோட் 9 ப்ரோ மேக்ஸ் ஸ்மார்ட்போன் வாங்கும் வாடிக்கையாளர்களில் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தினால் சிறப்பு சலுகை வழங்கப்படுகிறது. எனினும், இந்த ஸ்மார்ட்போன் விலையில் எந்த மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை.
புது சலுகையின் படி ரெட்மி நோட் 9 ப்ரோ மேக்ஸ் ஸ்மார்ட்போன் வாங்குவோர் ஹெச்டிஎப்சி வங்கி கார்டுகளை பயன்படுத்தும் போது ரூ. 1250 வரை சேமிக்க முடியும். இந்த சலுகை சியோமி நிறுவன வலைதளத்தில் மட்டும் வழங்கப்படுகிறது.
ரெட்மி நோட் 9 ப்ரோ மேக்ஸ் மாடல் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது முதல் இதுவரை அதன் விலையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. ரெட்மி நோட் 9 ப்ரோ மேக்ஸ் ஸ்மார்ட்போனின் விலை ரூ. 16,999 என துவங்கி டாப் எண்ட் மாடல் விலை ரூ. 19,999 என நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கிறது.
ரெட்மி நோட் 9 ப்ரோ மேக்ஸ் சிறப்பம்சங்கள்:
– 6.67 இன்ச் 2400×1080 பிக்சல் 20:9 FHD+ LCD டாட் டிஸ்ப்ளே
– கார்னிங் கொரில்லா கிளாஸ் 5
– ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 720ஜி பிராசஸர்
– அட்ரினோ 618 GPU
– 6 ஜி.பி. / 4 ஜி.பி. LPPDDR4x ரேம், 64 ஜி.பி. UFS 2.1 மெமரி
– 6 ஜி.பி. / 8 ஜி.பி. LPPDDR4x ரேம், 128 ஜி.பி. UFS 2.1 மெமரி
– மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
– டூயல் சிம்
– ஆண்ட்ராய்டு 10 மற்றும் MIUI 11
– 64 எம்.பி. பிரைமரி கேமரா, f/1.89
– 8 எம்.பி. 120° அல்ட்ரா வைடு ஆங்கில் லென்ஸ்
– 5 எம்.பி. மேக்ரோ லென்ஸ்
– 2 எம்.பி. டெப்த் சென்சார்
– 32 எம்.பி. செல்ஃபி கேமரா
– பக்கவாட்டில் கைரேகை சென்சார், இன்ஃப்ராரெட் சென்சார்
– 3.5 எம்.எம். ஆடியோ ஜாக், எஃப்.எம். ரேடியோ, டூயல் மைக்ரோபோன்
– ஸ்பிலாஷ் ப்ரூஃப் (P2i கோட்டிங்)
– டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, வோ வைபை, ப்ளூடூத் 5
– யு.எஸ்.பி. டைப்-சி
– 5020 எம்.ஏ.ஹெச். பேட்டரி
– 33 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங்
ரெட்மி நோட் 9 ப்ரோ மேக்ஸ் ஸ்மார்ட்போன் அரோரா புளூ, ஷேம்பெயின் கோல்டு, கிளேசியர் வைட் மற்றும் இன்டர்ஸ்டெல்லார் பிளாக் போன்ற நிறங்களில் கிடைக்கிறது.