குறைந்த விலையில் போட் ஸ்மார்ட்வாட்ச் அறிமுகம்

போட் நிறுவனம் ஏற்கனவே அறிவித்தப்படி இந்தியாவில் வாட்ச் எனிக்மா ஸ்மார்ட்வாட்ச் மாடலை அறிமுகம் செய்தது. முன்னதாக அக்டோபர் மாதத்தில் போட் ஸ்டாம் எனும் ஸ்மார்ட்வாட்ச் மாடலை போட் அறிமுகம் செய்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

புதிய போட் எனிக்மா ஸ்மார்ட்வாட்ச் 1.54 இன்ச் கலர் டச் ஸ்கிரீன் டிஸ்ப்ளே, இதய துடிப்பு சென்சார், எஸ்பிஒ2 மாணிட்டரிங், 8 ஸ்போர்ட்ஸ் மோட்கள், 3 ஏடிஎம் வாட்டர் ரெசிஸ்டண்ட் மற்றும் பல்வேறு இதர அம்சங்களை கொண்டிருக்கிறது.

 

இத்துடன் ப்ளூடூத் 4.2, அழைப்புகள், டெக்ஸ்ட் செடன்டரி அலெர்ட் வைப்ரேஷன், 24/7 இதய துடிப்பு சென்சார், SpO2 / இரத்தத்தின் காற்றோட்டத்தை டிராக் செய்யும் வசதி, உறக்கத்தை மாணிட்டர் செய்யும் வசதி, 8 விதமான ஸ்போர்ட்ஸ் மோட், ஜெஸ்ட்யூர் கண்ட்ரோல் உள்ளிட்டவை வழங்கப்பட்டு இருக்கிறது.

வாட்டர் ரெசிஸ்டண்ட் (3ATM / 30 meters) வசதி கொண்டிருக்கும் வாட்ச் எனிக்மா ரிமோட் கேமரா மற்றும் மியூசிக் கண்ட்ரோல் ஆப்ஷன் வழங்கப்பட்டு உள்ளது. இத்துடன் 230 எம்ஏஹெச் பேட்டரி வழங்கப்பட்டு இருக்கிறது.

போட் வாட்ச் எனிக்மா மாடல் சில்வர் நிறத்தில் கிடைக்கிறது. இந்தியாவில் இதன் விலை ரூ. 2999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. விற்பனை அமேசான் தளத்தில் நடைபெறுகிறது.