ரெட்மி 9 பவர் இந்திய வெளியீட்டு தேதி அறிவிப்பு

இந்தியாவில் ரெட்மி 9 பவர் ஸ்மார்ட்போன் டிசம்பர் 17 ஆம் தேதி அறிமுகம் செய்யப்படும் என சியோமி நிறுவனம் அறிவித்து இருக்கிறது. இந்த அறிவிப்பு ரெட்மி இந்தியா சமூக வலைதள கணக்கில் பதிவிடப்பட்டு இருக்கிறது. புது ஸ்மார்ட்போன் பவர் பேக்டு மாடலாக இருக்கும் என சியோமி குறிப்பிட்டுள்ளது.
முன்னதாக வெளியான தகவல்களில் இந்த ஸ்மார்ட்போன் டிசம்பர் 15 ஆம் தேதி அறிமுகம் செய்யப்படும் என கூறப்பட்டு இருந்தது. இந்த ஸ்மார்ட்போன் சமீபத்தில் சீன சந்தையில் அறிமுகம் செய்யப்பட்ட ரெட்மி நோட் 9 4ஜி மாடலின் ரி-பிராண்டு செய்யப்பட்ட வெர்ஷனாக இருக்கும் என தெரிகிறது.
 ரெட்மி 9 பவர்
ரெட்மி இந்தியா பதிவுகளின் படி ரெட்மி 9 பவர் ஸ்மார்ட்போன் இந்தியாவில் டிசம்பர் 17 ஆம் தேதி மதியம் 12 மணிக்கு அறிமுகம் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போனிற்கென பிரத்யேக வலைப்பக்கம் அமேசான் தளத்தில் உருவாக்கப்பட்டு இருக்கிறது.
சிறப்பம்சங்களை பொருத்தவரை ரெட்மி 9 பவர் ஸ்மார்ட்போன் 48 எம்பி பிரைமரி கேமரா, பாஸ்ட் சார்ஜிங் வசதி, ஹைரெஸ் ஆடியோ மற்றும் நான்குவித நிறங்களில் கிடைக்கும் என கூறப்படுகிறது.