விரைவில் இந்தியா வரும் இரு எல்ஜி ஸ்மார்ட்போன்கள்

எல்ஜி நிறுவனத்தின் கே42 மற்றும் கே52 ஸ்மார்ட்போன்கள் இந்திய பிஐஎஸ் வலைதளத்தில் இடம்பெற்று இருக்கின்றன. இரு மாடல்களும் LM-K420YMW மற்றும் LM-K520YMW மாடல் நம்பர் கொண்டிருக்கின்றன. இவை எல்ஜி கே42 மற்றும் எல்ஜி கே52 பெயர்களில் அறிமுகமாகும் என தெரிகிறது.
இந்திய பிஐஎஸ் வலைதளத்தில் இடம்பெற்று இருப்பதால் இவை விரைவில் அறிமுகம் செய்யப்படலாம் என கூறப்படுகிறது. எல்ஜி கே42 ஸ்மார்ட்போன் ஏற்கனவே மத்திய அமெரிக்காவிலும் எல்ஜி கே52 ஸ்மார்ட்போன் ஐரோப்பாவிலும் அறிமுகம் செய்யப்பட்டு விட்டன. 
சிறப்பம்சங்களை பொருத்தவரை எல்ஜி கே42 ஸ்மார்ட்போன் 6.6 இன்ச் ஹெச்டி பிளஸ் டிஸ்ப்ளே, பன்ச் ஹோல் கட்-அவுட், மீடியாடெக் ஹீலியோ பி22 பிராசஸர், 3 ஜிபி ரேம், 64 ஜிபி மெமரி, 13 எம்பி பிரைமரி கேமரா, 5 எம்பி சூப்பர் வைடு ஆங்கிள் கேமரா, 2 எம்பி டெப்த் சென்சார், 2 எம்பி மேக்ரோ மற்றும் 8 எம்பி செல்பி கேமரா வழங்கப்படுகிறது.
 எல்ஜி கே42
இத்துடன் 3D சவுண்ட் என்ஜின், 3.5 எம்எம் ஆடியோ ஜாக், ப்ளூடூத் 5, யுஎஸ்பி டைப் சி சார்ஜிங் போர்ட், 4000 எம்ஏஹெச் பேட்டரி, MIL-STD-810G சான்று வழங்கப்பட்டு இருக்கிறது.
எல்ஜி கே52 ஸ்மார்ட்போனில் 6.6 இன்ச் புல் விஷன் டிஸ்ப்ளே, மீடியாடெக் ஹீலியோ பி35 பிராசஸர், 4 ஜிபி ரேம், 48 எம்பி பிரைமரி கேமரா, 5 எம்பி அல்ட்ரா வைடு கேமரா, 2 எம்பி டெப்த் சென்சார், 2 எம்பி மேக்ரோ லென்ஸ், 13 எம்பி செல்பி கேமரா வழங்கப்பட்டு இருக்கிறது.
இத்துடன் 64 ஜிபி இன்டெர்னல் மெமரி, 4ஜி எல்டிஇ, வைபை, ப்ளூடூத், யுஎஸ்பி டைப் சி, பக்கவாட்டில் கைரேகை சென்சார், 4000 எம்ஏஹெச் பேட்டரி வழங்கப்பட்டு உள்ளது.