விரைவில் இந்தியா வரும் மோட்டோ ஸ்மார்ட்போன்

மோட்டோ ஜி9 பவர் ஸ்மார்ட்போன் இந்தியாவில் டிசம்பர் 8 ஆம் தேதி அறிமுகமாகிறது. இந்த தகவல் மோட்டோ ட்விட்டர் மற்றும் ப்ளிப்கார்ட் வலைதளத்தில் பதிவிடப்பட்டு இருக்கிறது. புதிய மோட்டோ ஸ்மார்ட்போன் மதியம் 12 மணிக்கு அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.
முன்னதாக இதே ஸ்மார்ட்போன் ஐரோப்பிய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டு விட்டது. புதிய மோட்டோ ஜி9 பவர் ஸ்மார்ட்போனிற்கென ப்ளிப்கார்ட் தளத்தில் பிரத்யேக வலைப்பக்கம் உருவாக்கப்பட்டு இருக்கிறது. இதில் அறிமுக தேதி, நேரம் மட்டும் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.
 மோட்டோ ஜி9 பவர்
ஐரோப்பிய சந்தையில் மோட்டோ ஜி9 பவர் ஸ்மார்ட்போன் 6.8 இன்ச் ஹெச்டி பிளஸ் 720×1640 பிக்சல் IPS டிஸ்ப்ளே, குவால்காம் ஸ்னாப்டிராகன் 662 பிராசஸர், 4 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி, மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி வழங்கப்பட்டு உள்ளது.
இத்துடன் 64 எம்பி பிரைமரி கேமரா, 2 எம்பி மேக்ரோ கேமரா, 2 எம்பி டெப்த் சென்சார் மற்றும் 16 எம்பி செல்பி கேமரா வழங்கப்பட்டு இருக்கிறது. 6000 எம்ஏஹெச் பேட்டரி கொண்ட மோட்டோ ஜி9 பவர் ஸ்மார்ட்போனில் 20 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது.
கனெக்டிவிட்டிக்கும் வைபை, ப்ளூடூத், யுஎஸ்பி டைப் சி, 3.5 எம்எம் ஆடியோ ஜாக், 4ஜி எல்டிஇ உள்ளிட்டவை வழங்கப்பட்டு உள்ளது. இதன் விலை 199 யூரோக்கள் இந்திய மதிப்பில் ரூ. 17,400 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.