வாட்ஸ் ஆப்பில் அசத்தலான மாற்றங்கள் ; அனுப்பிய குறுந்தகவல்கள் தானாகவே மறையும் வசதி

பேஸ்புக் நிறுவனத்தினால் நிர்வகிக்கப்பட்டுவரும் மற்றுமொரு அப்பிளிக்கேஷனான வாட்ஸ் ஆப்பினை பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்தும் அதிகரித்து வருகின்றமை தெரிந்ததே.

இதற்கு ஏற்றாற்போல் வாட்ஸ் ஆப்பில் பல்வேறு புதிய வசதிகள் மற்றும் மாற்றங்கள் அறிமுகம் செய்யப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் தற்போது அனுப்பிய குறுந்தகவல்கள் தானாகவே மறையும் வசதியையும் அறிமுகம் செய்துள்ளது.

குறித்த வசதியானது தனிநபருக்கு மற்றும் குழுக்களுக்கு அனுப்பும் குறுந்தகவல்களுக்கு அமையபெற்றுள்ளமை விஷேட அம்சமாகும்.

இந்த வசதியினை நாம் செயல்படுத்துவதன் மூலம் இந்த வசதி செயல்படுத்தியுள்ள தனிநபர் கணக்குகளுக்கு அனுப்பப்பட்ட குறுந்தகவல்கள் 7 தினங்களுக்கு பின்னர் தானாகவே மறைந்துவிடும் என வாட்ஸ் ஆப் நிறுவனம் அறிவித்துள்ளது.