அதிக விலைக்கு ஏலம் போன சூப்பர் மேரியோ வீடியோ கேம்

சூப்பர் மேரியோ ப்ரோஸ் 3 சீல் செய்யப்பட்ட வீடியோ கேம் 1,56,000 டாலர்கள், இந்திய மதிப்பில் ரூ. 1,15,48,758 விலைக்கு ஏலம் விடப்பட்டு இருக்கிறது. வீடியோ கேம் ஏல விற்பனை வரலாற்றில் இத்தனை கோடிகளுக்கு ஏலம் போன வீடியோ கேம் இது தான் என எக்ஸ்ப்ளிகா வெளியிட்டு இருக்கும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
நவம்பர் 20 ஆம் தேதி இந்த கேமிற்கான ஏலம் நடைபெற்றது. இந்த வீடியோ கேமிற்கான துவக்க விலை 62 ஆயிரம் டாலர்கள் என நிர்ணயம் செய்யப்பட்டது. இந்த ஏலத்தில் மொத்தம் 20 பேர் கலந்து கொண்டனர்.
 சூப்பர் மேரியோ ப்ரோஸ் 3
முன்னதாக சூப்பர் மேரியோ ப்ரோ என்இஎஸ் 11400 டாலர்களுக்கு ஏலம் போனது. அந்த வகையில் இம்முறை இதுவரை இல்லாத அளவு அதிக தொகைக்கு வீடியோ கேம் விற்பனையாகி இருக்கிறது.
வீடியோ கேம் ஏல தொகை இத்தனை லட்சம் டாலர்கள் வரை சென்று இருப்பது உலகிலேயே இதுதான் முதல் முறை என ஹெரிடேஜ் ஆக்ஷன்ஸ் நிறுவனம் தெரிவித்து உள்ளது.