இந்தியாவில் பப்ஜி மொபைல் விரைவில் வெளியீடு

பப்ஜி மொபைல் கேம் இந்தியாவில் தடை செய்யப்பட்டது முதல் மீண்டும் இந்த கேம் வெளியாகாதா என்ற கேள்வி பலருக்கும் இருந்தது. பலரின் கேள்விக்கு பதில் அளிக்கும் வகையில் பப்ஜி மொபைல் விரைவில் வெளியாகும் என்ற தகவல் கிடைத்து இருக்கிறது.
பப்ஜி இந்தியா பிரைவேட் லிமிடெட் எனும் பெயரில் தனி நிறுவனமாக பதிவு செய்யப்பட்டு உள்ளது. அந்த வகையில் பப்ஜி மொபைல் விரைவில் இந்தியாவில் வெளியாகலாம். பப்ஜி இந்தியா நிறுவனம் நவம்பர் 21 ஆம் தேதி பதிவு செய்யப்பட்டு இருப்பதாக கூறும் ஸ்கிரீன்ஷாட் இணையத்தில் வெளியாகி உள்ளது.
 பப்ஜி
முன்னதாக பப்ஜி இந்தியா வலைதளத்தில் பப்ஜி மொபைல் கேமிற்கான ஏபிகே பைல் காணப்படுவதாக பலர் இணையத்தில் தெரிவித்து வந்தனர். எனினும், இந்த கேமிற்கான சரியான வெளியீட்டு தேதி இதுவரை அறிவிக்கப்படவில்லை.
இந்தியாவில் மீண்டும் வெளியாக பப்ஜி மொபைல் கேமில் அதிகப்படியான மாற்றங்களை எதிர்கொள்ள பயனர்கள் தயாராக இருக்க வேண்டும் என பப்ஜி மொபைல் இந்தியா குழு தெரிவித்து இருக்கிறது. அதன்படி இந்திய வெர்ஷனில் பெருமளவு மாற்றங்கள் இருக்கலாம் என தெரிகிறது.