அதிரடி பரிசு தொகையுடன் ஸ்பாட்லைட் சேவையை அறிமுகம் செய்த ஸ்னாப்சாட்

ஸ்னாப் நிறுவனம் டிக்டாக் போன்று செயல்படும் புதிய அம்சத்தை ஸ்பாட்லைட் எனும் பெயரில் அறிமுகம் செய்துள்ளது. இந்த அம்சம் கொண்டு பயனர்கள் தங்களின் மிகவும் பொழுதுபோக்கான ஸ்னாப்களை பதிவு செய்து பரிசு வென்றிட வழி செய்கிறது.
ஸ்பாட்லைட் சேவையை பயன்படுத்த வைக்கும் நோக்கில் ஸ்னாப்சாட் அதிகபட்சம் 1 மில்லியன் டாலர்கள் வரையிலான பரிசு தொகையை வழங்குவதாக அறிவித்து இருக்கிறது. இந்த போட்டியில் கலந்து கொள்வோர் குறைந்தபட்சம் 16 வயதுடையவராக இருக்க வேண்டும். 
 ஸ்பாட்லைட்
மேலும் ஸ்னாப் அறிவித்து இருக்கும் வழிமுறைகளை சரியாக பின்பற்றியிருக்க வேண்டும். வீடியோக்கள் 60 நொடிகளில் செங்குத்தாக சவுண்ட் சேர்க்கப்பட்டு இருக்க வேண்டும். புகைப்படங்கள், செங்குத்தாக இருக்கும் படங்கள், தெளிவற்ற படங்கள், எழுத்துக்கள் மட்டும் அடங்கிய ஸ்னாப்கள் ஸ்பாட்லைட்டில் இடம்பெறாது.
பயனர்கள் கேமரா ரோலில் இருந்தபடி ஸ்பாட்லைட்டிற்கு பதிவு செய்ய முடியும். இதற்கு பயனர்கள் Send To பக்கத்தில் #topic என குறிப்பிட்டு தங்களின் சிறந்த ஸ்னாப்களை அனுப்பலாம். எனினும், நாள் ஒன்றிற்கு இத்தனை பதிவுகள் தான என கட்டுப்பாடுகள் உள்ளன.
தற்சமயம் ஸ்னாப்சாட் ஸ்பாட்லைட் அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, இங்கிலாந்து, ஐயர்லாந்து, நார்வே, ஸ்வீடன், டென்மார்க், ஜெர்மனி மற்றும் பிரான்ஸ் போன்ற நாடுகளில் மட்டும் கிடைக்கிறது. விரைவில் இது மற்ற நாடுகளிலும் அறிமுகமாகும் என எதிர்பார்க்கலாம்.