கூகுள் வெளியிட்ட அறிவிப்பு – அதிர்ச்சியில் வாடிக்கையாளர்கள்

கூகுளில் இலவசமாக வழங்கப்பட்டு வந்த சேவையொன்றுக்கு கட்டணம் அறவிடப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டள்ளதால் கூகுள் வாடிக்கையாளர்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

கடந்த 5 ஆண்டுகளாக கூகுள் நிறுவனம் வாடிக்கையாளர்களுக்கு செய்து கொடுத்திருந்த வசதிகளில் ஒன்று கூகுள் போட்டோஸ் என்பது அறிந்ததே.

இந்த கூகுள் போட்டோஸ் அன்லிமிட்டெட் இலவச சேமிப்பை கொடுத்து வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இதனை அடுத்து தற்போது வரும் வரும் 2021 ஆம் ஆண்டு ஜூன் முதலாம் திகதி முதல் கூகுள் போட்டோஸ் அன்லிமிட்டெட் இலவச சேவையை நிறுத்திக் கொள்வதாக அறிவித்துள்ளது.

இனிமேல் அன்லிமிட்டெட் ஆக போட்டோக்களை சேமித்து வைத்துக்கொள்ள முடியாது என்றும் 15 ஜிபி மட்டுமே புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை இலவசமாக சேமித்து வைக்க முடியும் என்றும் அதற்கு மேல் சேமித்து வைக்க வேண்டுமென்றால் கட்டணம் வசூலிக்கப்படும் என்றும் கூகுள் அறிவித்துள்ளது.

இந்த அறிவிப்பு 2021 ஆம் ஆண்டு ஜூன் 1 முதல் அமலுக்கு வரும் என கூகுள் அறிவித்துள்ளது.

இதனால் கூகுள் போட்டோஸ் வசதியை பயன்படுத்தி வரும் வாடிக்கையாளர்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

x