Alexa வின் முடிவு அறிவிக்கப்பட்டது ; அதன் பயனாளர்கள் அதிர்ச்சியில்

அமேசானின் சக்திவாய்ந்த எஸ்சிஓ (SEO) மற்றும் ஆன்லைன் மார்க்கெட்டிங் கருவிகள் (online marketing tools) 2022 இல் முடிவுக்கு வருவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Alexa.com தனது மார்க்கெட்டிங் சேவையில் இருந்து 25 ஆண்டுகளுக்குப் பிறகு ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளது.

1996 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட அலெக்சா நிறுவனம் 1999 ஆம் ஆண்டில் Amazon நிறுவனத்தால் கையகப்படுத்தப்பட்டது.

இது ஆரம்பத்தில் இணையத்தள உரிமையாளர்களுக்கு அவர்களின் இணைய பாவணையாளர்களின் வருகைக்கு அடிப்படையில் தரவரிசைகளை வழங்கி வந்தது.

காலப்போக்கில் அலெக்சா இறுதியில் இணையத்தள தணிக்கை (auditing) மற்றும் பின்னிணைப்பு சரிபார்ப்பு (backlink checking) உள்ளிட்ட சந்தைப்படுத்தல் தயாரிப்புகளின் முழு தொகுப்பையும் வழங்க விரிவடைந்தமை குறிப்பிடத்தக்கது.

இது வருகின்ற வருடம் மே (2022 . May )மாதத்துடன் தனது சேவையினை முடிவுக்கு கொண்டு வருவதாக உத்தியோகப்பூர்வமாக அறிவித்துள்ளது.