இணையத்தில் லீக் ஆன ஒன்பிளஸ் நார்டு 2

ஒன்பிளஸ் நார்டு 2 ஸ்மார்ட்போன் ஜூன் மாத வாக்கில் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. வரும் நாட்களில் இந்த ஸ்மார்ட்போனிற்கான சோதனை துவங்கும் என கூறப்படுகிறது. புதிய ஒன்பிளஸ் நார்டு 2 அந்நிறுவனத்தின் வலைதளத்தில் தவறுதலாக பட்டியலிடப்பட்டது.
இந்த ஸ்மார்ட்போனுடன் ஒன்பிளஸ் 8டி, ஒன்பிளஸ் 8 ப்ரோ, ஒன்பிளஸ் நார்டு மற்றும் ஒன்பிளஸ் 9 போன்ற மாடல்கள் இடம்பெற்று இருந்தது. ஒன்பிளஸ் நார்டு 2 சரியான வெளியீட்டு தேதி இதுவரை அறிவிக்கப்படவில்லை. எனினும், இது ஜூன் மாத மத்தியில் அறிமுகம் செய்யப்படலாம் என கூறப்படுகிறது.
 ஒன்பிளஸ் நார்டு
புதிய ஒன்பிளஸ் ஸ்மார்ட்போன் பிஐஎஸ் சான்று பெற்று இருப்பதால், இது இந்திய சந்தையிலும் அறிமுகமாகும் என தெரிகிறது. மற்ற ஒன்பிளஸ் சாதனங்களுடன் ஒன்பிளஸ் நார்டு 2 இடம்பெற்று இருப்பதை தனியார் செய்தி நிறுவனம் கண்டறிந்து இருக்கிறது.
ஒன்பிளஸ் நார்டு 2 மாடலில் மீடியாடெக் டிமென்சிட்டி 1200 பிராசஸர், AMOLED டிஸ்ப்ளே, அதிக ரிப்ரெஷ் ரேட், பாஸ்ட் சார்ஜிங் வசதி, 48 எம்பி அல்லது 64 எம்பி பிரைமரி கேமரா சென்சார் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியா மட்டுமின்றி இந்த மாடல் சர்வதேச சந்தையிலும் அறிமுகமாகும் என கூறப்படுகிறது.