ரூ. 2 ஆயிரம் பட்ஜெட்டில் விற்பனைக்கு வந்த எம்ஐ 30000 எம்ஏஹெச் பவர் பேங்க்

சியோமி நிறுவனம் மார்ச் மாத வாக்கில் புதிய எம்ஐ 30000 எம்ஏஹெச் பவர் பேங்க் மாடலை கிரவுட் பண்டிங்கிற்கு கொண்டு வந்தது. இம்மாத துவக்கத்தில் இதன் விநியோகம் துவங்கப்பட்டது. இந்த பவர் பேங்க் 24W யுஎஸ்பி டைப் சி இன்புட், 18W அவுட்புட் வழங்கும் பாஸ்ட் சார்ஜிங் வசதி கொண்டிருக்கிறது.
பாலிகார்பனைட் மற்றும் ஏபிஎஸ் பாடி, ஆன்டி-ஸ்கிட் பினிஷ் செய்யப்பட்டு இருக்கிறது. இந்த பவர் பேங்க் இரண்டு யுஎஸ்பி டைப் ஏ போர்ட்களை அதிகபட்சம் 18W அவுட்புட் திறனுடன் கொண்டிருக்கிறது. மேலும் இதில் நான்கு எல்இடி சார்ஜ் இன்டிகேட்டர்கள், பக்கவாட்டில் பட்டன் வழங்கப்பட்டுள்ளது.
 எம்ஐ பவர் பேங்க்
இத்துடன் எம்ஐ பேண்ட், ஹெட்செட் போன்ற சாதனங்களை சார்ஜ் செய்ய ஏதுவாக இந்த பவர் பேங்க் லோ பவர் மோட் கொண்டிருக்கிறது. இந்த பவர் பேங்க் மாடலில் 30000 எம்ஏஹெச் பேட்டரி இருப்பதால், இதனை விமானங்களில் கொண்டு செல்ல முடியாது.
இந்தியாவில் எம்ஐ 30000 எம்ஏஹெச் பவர் பேங்க் விலை ரூ. 2299 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதன் விற்பனை ப்ளிப்கார்ட், எம்ஐ வலைதளங்கள், எம்ஐ ஹோம் ஸ்டோர் மற்றும் இதர ஆப்லைன் விற்பனையகங்களிலும் நடைபெறுகிறது.