ஹீலியோ ஜி80, 6000 எம்ஏஹெச் பேட்டரியுடன் உருவாகும் சாம்சங் ஸ்மார்ட்போன்

சாம்சங் நிறுவனம் சத்தமின்றி உருவாக்கி வரும் புது கேலக்ஸி எம் சீரிஸ் ஸ்மார்ட்போன் விவரங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது. தற்போதைய தகவல்களின்படி இந்த மாடல் கேலக்ஸி எம்32 ஆக இருக்கும் என கூறப்படுகிறது. புது சாம்சங் ஸ்மார்ட்போன் விவரங்கள் கீக்பென்ச் தளத்தில் வெளியாகி உள்ளது.

அதன்படி புதிய சாம்சங் ஸ்மார்ட்போன் SM-M325F எனும் மாடல் நம்பர் கொண்டு உருவாகி வருகிறது. மேலும் இது ஆண்ட்ராய்டு 11 ஒஎஸ், அதிகபட்சம் 6 ஜிபி ரேம் கொண்டிருக்கிறது.

 சாம்சங் ஸ்மார்ட்போன்
கேலக்ஸி எம்32 எதிர்பார்க்கப்படும் அம்சங்கள்
– 6.4 இன்ச் FHD+ சூப்பர் AMOLED இன்பினிட்டி யு டிஸ்ப்ளே
– கார்னிங் கொரில்லா கிளாஸ் 5
– ஆக்டாகோர் மீடியாடெக் ஹீலியோ ஜி80 பிராசஸர்
– ARM மாலி-G52 2EEMC2 GPU
– 6 ஜிபி / 8 ஜிபி LPDDR4x ரேம்
– 64 ஜிபி / 128 ஜிபி மெமரி
– மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
– ஆண்ட்ராய்டு 11 மற்றும் ஒன் யுஐ 3.1
– ஹைப்ரிட் டூயல் சிம்
– 64 எம்பி பிரைமரி கேமரா, f/1.8, LED பிளாஷ்
– 8 எம்பி அல்ட்ரா வைடு ஆங்கில் கேமரா, f/2.2
– 5 எம்பி டெப்த் கேமரா
– 5 எம்பி மேக்ரோ சென்சார், f/2.4
– 20 எம்பி செல்பி கேமரா, f/2.2
– இன் டிஸ்ப்ளே கைரேகை சென்சார்
– 3.5 எம்எம் ஆடியோ ஜாக், டால்பி அட்மோஸ்
– டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5
– யுஎஸ்பி டைப் சி
– 6000 எம்ஏஹெச் பேட்டரி
– 15 வாட் பாஸ்ட் சார்ஜிங்
x