இந்திய சந்தையில் சியோமி எம்ஐ வாட்ச் ரிவால்வ் அறிமுகம்

சியோமி நிறுவனம் எம்ஐ வாட்ச் ரிவால்வ் பெயரில் புதிய ஸ்மார்ட்வாட்ச் மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. இதன் 46எம்எம் வெர்ஷனில் 1.3 இன்ச் AMOLED ஸ்கிரீன், கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 வழங்கப்பட்டு உள்ளது.
இத்துடன் ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் பிரேம், 10 ஸ்போர்ட்ஸ் வகைகளை டிராக் செய்யும் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது. மேலும் 5 ஏடிஎம் வாட்டர் ப்ரூஃப் மற்றும் ஜிபிஎஸ் வசதி வழங்கப்பட்டு உள்ளது. மேலும் இது 14 நாட்கள் பேட்டரி பேக்கப் வழங்குகிறது.
சியோமி எம்ஐ வாட்ச் ரிவால்வ் சிறப்பம்சங்கள்
– 1.39 இன்ச் 454×454 பிக்சல் AMOLED ஸ்கிரீன்
– கார்னிங் கொரில்லா கிளாஸ் 3
– ப்ளூடூத் 5, ஜிபிஎஸ்
– ஆண்ட்ராய்டு 4.4 மற்றும் ஐஒஎஸ் தளங்களுடன் இயங்கும் வசதி
– இதய துடிப்பு சென்சாருடன் பல்வேறு இதர சென்சார்கள்
– ஸ்லீப் டிராக்கிங், பிட்னஸ் டிராக்கிங் மற்றும் 10 ஸ்போர்ட்ஸ் மோட்கள்
– வாட்டர் ரெசிஸ்டண்ட்
– 420 எம்ஏஹெச் பேட்டரி
– 14 நாட்கள் பேட்டரி பேக்கப்
சியோமி எம்ஐ வாட்ச் ரிவால்வ் மிட்நைட் பிளாக் மற்றும் ஸ்பேஸ் பிளாக் ஸ்டிராப், குரோம் சில்வர் மற்றும் நெப்டியூன் புளூ ஸ்டிராப் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. இதன் விலை ரூ. 10,999 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. எனினும், தீபாவளி வரை இது ரூ. 9,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது.