ரூ. 15 ஆயிரம் பட்ஜெட்டில் உருவாகும் கேலக்ஸி ஏ சீரிஸ் ஸ்மார்ட்போன்

சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி ஏ12 ஸ்மார்ட்போன் விவரங்கள் இணையத்தில் வெளியாகி இருக்கிறது. அதன்படி புதிய கேலக்ஸி ஏ12 ஸ்மார்ட்போன் 6.5 இன்ச் ஹெச்டி பிளஸ் டிஎப்டி டிஸ்ப்ளே, மீடியாடெக் ஹீலியோ பி35 பிராசஸர் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது.

புகைப்படங்களை எடுக்க 48 எம்பி பிரைமரி கேமரா, 5 எம்பி அல்ட்ரா வைடு ஆங்கில் லென்ஸ், 2 எம்பி டெப்த் சென்சார், 2 எம்பி மேக்ரோ சென்சார் மற்றும் 8 எம்பி செல்பி கேமரா வழங்கப்படும் என தெரிகிறது.

 சாம்சங் கேலக்ஸி ஏ11
இத்துடன் ஆண்ட்ராய்டு 10 ஒஎஸ், 6 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி, மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி, பக்கவாட்டில் கைரேகை சென்சார், 5000 எம்ஏஹெச் பேட்டரி மற்றும் 15 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்படலாம். கனெக்டிவிடிக்கு வைபை, ப்ளூடூத் 5, ஜிபிஎஸ் மற்றும் யுஎஸ்பி டைப் சி போர்ட் வழங்கப்படலாம்.
சர்வதேச சந்தையில் கேலக்ஸி ஏ12 மாடலின் விலை 179 யூரோக்கள் இந்திய மதிப்பில் ரூ. 15,800 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இந்த ஸ்மார்ட்போன் பிளாக், புளூ, வைட் மற்றும் ரெட் நிறங்களில் கிடைக்கிறது.
x