வாடிக்கையாளர்களுக்கு இலவச டேட்டா வழங்கும் வி

வி (வோடபோன் ஐடியா ) நிறுவனம் தேர்வு செய்யப்பட்ட பிரீபெயிட் வாடிக்கையாளர்களுக்கு 1 ஜிபி டேட்டாவை இலவசமாக வழங்குகிறது. எனினும், இது தேர்வு செய்யப்பட்ட வாடிக்கையாளர்களுக்கு மட்டும் வழங்கப்படுவதாக தெரிகிறது.

இலவச டேட்டாவுக்கு தேர்வு செய்யப்படும் வாடிக்கையாளர்களுக்கு வி குறுந்தகவல் மூலம் தகவல் தெரிவிக்கிறது. பின் வி செயலியை கொண்டு கூடுதல் டேட்டா பற்றிய தகவல்களை வாடிக்கையாளர்கள் அறிந்து கொள்ள முடியும்.

இலவச டேட்டா விளம்பர ரீதியில் வழங்கப்படுவதால், ஏழு நாட்களுக்கு பின் இது கிடைக்காது. ஏற்கனவே பயன்படுத்தப்படும் சலுகை தீர்ந்ததும், புதிய சலுகையை தேர்வு செய்ய இலவச டேட்டா பயன்படலாம் என கூறப்படுகிறது. முன்னதாக வி நிறுவனம் ஜீ5 சந்தா உள்ளடக்கிய சலுகைகளை அறிவித்து இருந்தது.
ஜீ5 சந்தா உள்ளடக்கிய வி சலுகைகள் விலை ரூ. 355 முதல் துவங்குகிறது. இத்துடன் புதிதாக ரூ. 351 சலுகையையும் வி அறிவித்தது. இதில் வொர்க் பிரம் ஹோம் சலுகை ஆகும். இதில் பயனர்களுக்கு 100 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது.