இன்றைய ராசி பலன் – 12-2-2021

மேஷம்

மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நீங்கள் எதிர்பார்ப்பதை விட அதிக லாபத்தைக் காண்பீர்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு உடன் பணிபுரிபவர்களிடம் ஏற்படும் மனக்கசப்புகள் நீங்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்புகள் உண்டு.

ரிஷபம்

ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் சொத்துக்கள் மூலம் ஒரு சிலருக்கு அனுகூலமான பலன்களை காணலாம். உத்தியோகத்தில் இருப்பவர்கள் தான் உண்டு தன் வேலை உண்டு என்று இல்லாமல் மற்றவர்களுடன் தேவையற்ற வாக்குவாதங்களில் ஈடுபட்டால் பிரச்சனைகளை சந்திப்பீர்கள். கணவன் மனைவி இடையே இருந்த சண்டைகள் நீங்கும்.

மிதுனம்

மிதுன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் பெண்களுக்கு எதிர்பாராத திடீர் அதிர்ஷ்ட யோகம் வாய்க்கப் பெறும். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு மந்த நிலை காணப்பட்டாலும் பெரிதாக பாதிப்புகள் எதுவும் இருக்காது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு எதிர்பாராத வீண் விரயங்கள் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உண்டு.

கடகம்

கடக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எடுக்கும் முயற்சியில் காலதாமதம் ஏற்பட்டாலும் வெற்றி உங்கள் பக்கம் தான் இருக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருந்துவந்த மந்தநிலை மாறி சிறப்பான ஒரு முன்னேற்றத்தை காணலாம். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மன அமைதி கிடைப்பதில் இடையூறுகள் ஏற்படலாம்.

சிம்மம்

சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் சேமிப்பின் அற்புதத்தை உணர்ந்து கொள்வீர்கள். ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்வதன் மூலம் ஏற்றம் காணலாம். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வீண் விரயங்கள் ஏற்பட வாய்ப்புகள் உண்டு. சுபகாரிய முயற்சிகளில் ஈடுபட்டு உள்ளவர்களுக்கு நன்மைகள் நடைபெறும்.

கன்னி

கன்னி ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் சுப யோகமாக அமையக்கூடிய நாளாக இருக்கும். வெளியூர் மற்றும் வெளிநாடு தொடர்புடைய விஷயங்களில் நல்ல செய்திகளை பெறுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் வாகன ரீதியான பயணங்களால் அனுகூலமான பலன்களை காணலாம். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு பங்குதாரர்கள் மூலம் இருந்து வந்த பிரச்சனைகள் நீங்கும்.

துலாம்

துலாம் ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நீண்ட நாள் கனவு நிறைவேறுவதற்கான வாய்ப்பு உண்டு. உங்கள் வீட்டிற்கு புதிய நபர்களின் வருகை சாதகமான பலன்களைக் கொடுக்கும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த பதவி உயர்வு கிடைக்கப் பெறும். தொழில் மற்றும் வியாபாரத்தில் எதிர்பார்த்த அளவிற்கு லாபம் உண்டாகும்.

விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எதிலும் நிதானம் தேவை. உத்தியோகத்தில் இருப்பவர்கள் எடுத்தோம் கவிழ்த்தோம் என்று சட்டென முடிவு எடுப்பதை தவிர்ப்பது நல்லது. தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு பொருளாதார ரீதியான ஏற்ற இறக்கங்களை சமாளிக்கக் கூடிய உத்வேகம் பிறக்கும்.

தனுசு

தனுசு ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் இறைவழிபாடுகள் மூலம் மன அமைதியை காண்பீர்கள். கணவன் மனைவிக்கு இடையே தேவையற்ற வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நிலுவைத் தொகைகள் வசூலாக கூடிய வாய்ப்புகள் உண்டு. தொழில் மற்றும் வியாபார ரீதியான முன்னேற்றம் எதிர்பார்த்தபடி இருக்கும்.

மகரம்

மகர ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நீங்கள் உற்சாகத்துடன் காணப்படுவீர்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் நீங்கள் எடுக்கும் முயற்சிகளில் ஜெயம் உண்டாகும். வேலை இல்லாதவர்களுக்கு மனதிற்குப் பிடித்த வேலை அமையும். பிள்ளை வரம் வேண்டி காத்திருப்பவர்களுக்கு நல்ல செய்திகள் கிடைக்கும்.

கும்பம்

கும்ப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நீங்கள் எடுக்கும் முயற்சிகளில் சீரான முன்னேற்றம் காணப்படும். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு போட்டி பொறாமைகள் குறைந்து முன்னேற்றம் பெருகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு ஊதிய உயர்வு கிடைப்பதில் பிரச்சனைகள் ஏற்படலாம். ஆரோக்கியத்தில் மட்டும் கூடுதல் கவனம் தேவை.

மீனம்

மீன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எதிலும் மௌனம் காப்பது நல்லது. தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு எதிர்பார்க்கும் புதிய வாய்ப்புகளை சரியாக பயன்படுத்திக் கொள்வீர்கள். கணவன் மனைவிக்குள் இருக்கும் கருத்து வேறுபாடுகள் நீங்க ஒருவரை ஒருவர் அனுசரித்து செல்வது நல்லது.

x