இன்றைய ராசி பலன் – 20-1-2021

மேஷம்

மேஷ ராசிக்காரர்கள் இன்று கொஞ்சம் கவனத்தோடு நடந்துகொள்ள வேண்டும். யாரை நம்பியும் உங்களது வேலையை ஒப்படைக்காதீர்கள். அடுத்தவர்கள் உங்களை ஏமாற்றுவதற்கு வாய்ப்பு உள்ளது. மற்றபடி, சொந்தத் தொழிலும், செய்யும் வேலையிலும் நல்ல முன்னேற்றம் உண்டு. உடல் ஆரோக்கியம் மேம்படும்.

ரிஷபம்

ரிஷப ராசிக்காரர்களுக்கு இது உற்சாகம் தரக்கூடிய நாளாக இருக்கப் போகின்றது. எந்த ஒரு வேலையையும் சுறுசுறுப்பாக முடித்து விட்டு, அதில் வெற்றியையும் காண்பீர்கள். உங்களை சுற்றி இருப்பவர்கள் உங்களை புகழும் அளவிற்கு உங்களது புத்தி சுறுசுறுப்போடு செயல்பட போகின்றது.

மிதுனம்

மிதுன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் கொஞ்சம் மந்தமாக நாளாகத்தான் இருக்க போகின்றது. சோம்பேறி தனத்தை எல்லாம் ஒதுக்கி வைத்துவிட்டு, விடா முயற்சியை மேற்கொண்டால் மட்டுமே வெற்றி கிடைக்கும். உங்களது மேலதிகாரியை அலுவலகத்தில் அனுசரித்து சென்றுதான் ஆகவேண்டும். வாக்குவாதம் கூடாது.

 

கடகம்

கடக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் வெற்றி தரும் நாளாக அமையப் போகின்றது. புதிய முயற்சிகளை தைரியத்தோடு மேற்கொள்ளலாம். வாராக் கடனை வசூல் செய்யும் முயற்சி செய்யுங்கள். கடன் தொகை வசூல் ஆவதற்கு வாய்ப்பு உள்ளது. வாழ்க்கையின் முன்னேற்றத்திற்கு உங்களுடைய நண்பர்கள் உதவியாக நிற்பார்கள்.

சிம்மம்

சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் செலவாகக் கூடிய நாளாக இருக்கப்போகின்றது. கையில் இருக்கும் இருப்புத் தொகையை பத்திரமாக வைத்துக்கொள்ளுங்கள். அனாவசியமாக செலவு செய்தால் மாத இறுதியில் கஷ்டப்படுவீர்கள். அவ்வப்போது தேவையற்ற டென்ஷன் வந்து போகும். மனதை அமைதியாக வைத்துக் கொள்ளுங்கள்.

கன்னி

கன்னி ராசிக்காரர்களுக்கு இந்த நாள் உற்சாகம் தரும் நாளாக அமையப்போகின்றது. குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். கணவன் மனைவிக்கிடையே ஒற்றுமை அதிகரிக்கும். பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் உண்டு. அலுவலகத்தில் பாராட்டு மழைதான்.

துலாம்

துலாம் ராசிக்காரர்களுக்கு இந்த நாள் கொஞ்சம் குழப்பமான நாளாகத்தான் இருக்க போகின்றது. எந்த முடிவை எடுப்பது, எந்த முடிவு சரி, எந்த முடி தவறு என்று பல பிரச்சினைகள் வந்து மூளையை கசக்கும். எல்லா வற்றையும் நாளை தள்ளி வைத்துவிடுங்கள். நாளை பார்த்துக்கொள்ளலாம். மன அமைதிக்கு ஓம் நமசிவாய மந்திரத்தை சொல்ல வேண்டும்.

விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரர்களுக்கு இந்த நாள் அற்புதமான நாளாக அமைய போகின்றது. எடுத்த காரியத்தில் வெற்றி காண்பீர்கள். குடும்பத்திற்கு தேவையான விலை உயர்ந்த பொருட்களை வாங்கி வைக்கப் போகிறீர்கள். பண வரவு அதிகரிக்க போகின்றது. வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். உயர்வு தரும் பல விஷயங்களை இன்று நீங்கள் சந்திக்க வாய்ப்பு உண்டு.

தனுசு

தனுசு ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் சுபமான நாளாக அமையப்போகின்றது. திருமண பேச்சுவார்த்தையை தொடங்கலாம். அல்லது வீட்டில் ஏதாவது ஒரு சுப விசேஷங்கள் தடைபட்டு இருந்தால் அந்த விசேஷம் பற்றின பேச்சினை ஆரம்பிக்கலாம். குலதெய்வ கோவிலுக்கு செல்லலாம். இப்படியாக உங்களுக்கு சுபகாரியங்கள் இன்று நடக்கும்.

மகரம்

மகர ராசிக்காரர்களுக்கு இன்று பல புதிய வாய்ப்புகள் தேடிவரும். உங்களால் எதைச் செய்ய முடியுமோ அதை மட்டும் ஏற்றுக்கொண்டு, செய்ய வேண்டும். லாபம் கிடைக்கிறது என்பதற்காக எல்லா சுமையையும் தூக்கி தலைமேல் போட்டுக்கொள்ள வேண்டாம். சிந்தித்து செயல்படுங்கள் அதிக கடன் வாங்காதீர்கள்.

கும்பம்

கும்ப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் மன மகிழ்ச்சியான நாளாக அமையப்போகின்றது. தீராத கடன் தொல்லை ஒன்றை இன்று தீர்த்து வைக்கப் போகிறீர்கள். உங்களுடைய வாழ்க்கையின் முன்னேற்றத்திற்கு நண்பர்கள் உறுதுணையாக நிற்பார்கள். சொந்தத் தொழில், அலுவலக பணியில் முன்னேற்றம் உண்டு.

மீனம்

மீன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் சுமாரான நாளாகத்தான் இருக்க போகின்றது. எதையோ இழந்தது போல மனது சொல்லும். ஆனால் எதையுமே இழக்கவில்லை. இழப்பதற்கு நம் கையில் எதுவும் இல்லை, என்று நினைத்துக்கொண்டு விடாமுயற்சியோடு செயல்படுங்கள். இன்றைக்கு உள்ள கஷ்டம் நாளைக்கு காணாமல் போய்விடும்.

x