இன்றைய ராசிபலன் 25.09.2020

மேஷம்

மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் சிந்தித்து செயல்பட வேண்டிய நாளாக அமைய இருக்கிறது. சொத்துக்கள் வாங்கும் முயற்சிகளில் ஒரு முறைக்கு பலமுறை சிந்தித்து முடிவெடுப்பது நல்லது. உத்தியோகத்தில் இருக்கும். புதிய முயற்சிகள் தள்ளி வைப்பது நல்லது. கணவன் மனைவி இடையே அன்பு அதிகரிக்கும்.

ரிஷபம்

ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாளில் ஏற்றம் தரும். தொழில் மற்றும் வியாபார ரீதியான முன்னேற்றத்தில் நல்ல மாற்றம் காண முடியும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பணிச்சுமை அதிகரிக்க வாய்ப்புகள் உண்டு. கணவன் மனைவி இடையே சிறு சிறு சண்டை சச்சரவுகள் ஏற்படலாம் என்பதால் ஒருவரை ஒருவர் அனுசரித்து செல்வது நல்லது. குடும்பத்தில் மகிழ்ச்சி நிறைந்து இருக்கும்.

மிதுனம்

மிதுன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எதிர்பார்த்த விஷயங்கள் காலதாமதம் ஆவதற்கு நிறைய வாய்ப்புகள் உள்ளன. கொடுக்கல் வாங்கல் தொடர்பான விஷயங்களில் கூடுமானவரை பெரிய தொகையை ஈடுபடாமல் இருப்பது நல்லது. தொழில் மற்றும் வியாபாரத்தில் கூட்டாளிகள் அனுசரணையாக இருப்பார்கள். உத்தியோகத்தில் புதிய பொறுப்புகள் ஒரு சிலருக்கு கிடைக்கப் பெறும். கலைத்துறையில் இருப்பவர்களுக்கு முன்னேற்றமான நாளாக இருக்கும்.

கடகம்

கடக ராசிகாரர்களுக்கு இன்றைய நாள் கவனமாக இருக்கவேண்டிய நாளாக அமைய இருக்கிறது. வாகன ரீதியான பயணங்களின் பொழுது சற்று எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. நண்பர்கள் மற்றும் உறவினர்களின் மூலம் ஆதாயம் காணலாம். உத்தியோகத்தில் சக பணியாளர்கள் மூலம் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். சுபகாரிய முயற்சிகள் தடையின்றி வெற்றி தரும்.

சிம்மம்

சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நினைத்ததை அடைய கூடிய சந்தர்ப்பங்கள் அமையும். பெண்கள் இறை வழிபாடுகளில் அதிக கவனம் செலுத்துவீர்கள். தொழில் தொடர்பான விஷயங்களில் மூன்றாம் நபர்களிடமிருந்து எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. நீங்கள் அதிகம் நம்பும் ஒருவரே உங்களுக்கு ஏமாற்றத்தையும் அளிக்க இருக்கிறார். உடல் ஆரோக்கியம் சீராக இருக்கும்.

கன்னி

கன்னி ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் ஏற்றம் தரும் அமைப்பாக இருப்பதால் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி லாபம் காண்பீர்கள். பணம் கொடுக்கல் வாங்கல் சரளமாக நடைபெறும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். கணவன் மனைவி இடையேயான ஒற்றுமை அதிகரிப்பதற்கு வாய்ப்புகள் அமையும். பூர்வீக சொத்துக்கள் மூலம் ஒரு சிலருக்கு அனுகூலமான பலன்கள் கிடைக்க பெறும்.

துலாம்

துலாம் ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உற்சாகம் தரக்கூடிய அமைப்பாக இருப்பதால் நினைத்த காரியத்தை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். குடும்பத்தில் உங்களுக்கு இருந்து வந்த மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கக் கூடிய நாளாக அமையும். உங்களின் விடா முயற்சிக்கு தகுந்த பலன் கிடைக்க இருக்கிறது. அசையும் மற்றும் அசையா சொத்துக்கள் வாங்கும் முயற்சிகளில் சற்று கூடுதல் எச்சரிக்கையுடன் செயல்படுவது நல்லது.

விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எதிர்பாராத நபர்கள் மூலம் எதிர்பாராத விஷயங்கள் நடை பெறுவதற்கு வாய்ப்புகள் உண்டு. திடீர் தனவரவு குடும்பத்தில் இருப்பவர்களையும் உங்களையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தும். பிள்ளைகளின் ஆரோக்கிய ரீதியான விஷயத்தில் கூடுதல் கவனமாக இருப்பது நல்லது. தொழில் மற்றும் வியாபார ரீதியான போட்டி பொறாமைகள் அதிகரிக்க வாய்ப்புகள் உண்டு என்பதால் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது.

தனுசு

தனுசு ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நல்லவர்கள் யார் கெட்டவர்கள் யார் என்று அடையாளம் தெரிந்து கொள்ளும் நாளாக அமைய இருக்கிறது.பொருளாதாரத்தில் ஏற்ற இறக்கமான சூழ்நிலை இருந்தாலும் வீட்டுத் தேவைகளை எளிதில் பூர்த்தி செய்வீர்கள். கணவன் மனைவி மற்றும் சகோதர சகோதரிகள் இடையேயான உறவு சுமூகமாக காணப்படும். உற்றார் மற்றும் உறவினர்களின் வருகை மகிழ்ச்சியை தரும்.

மகரம்

மகர ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உடல்ரீதியான பிரச்சனைகளை சரிசெய்து கொள்ள வேண்டிய அவசியம் ஏற்படும். உடல் ஆரோக்கியத்தில் கூடுமானவரை கவனமாக இருப்பது நல்லது. சுய தொழில் புரிபவர்களுக்கு லாபகரமான நாளாக அமையும். உத்தியோகத்தில் ஒரு சிலருக்கு எதிர்பார்த்த படி ஊதிய உயர்வு மற்றும் பதவி உயர்வு போன்றவற்றில் சாதகமான பலன்கள் கிடைக்கும். விக்னங்களை தீர்க்கும் விநாயகரை வழிபடுதல் நல்லது நடக்கும்.

கும்பம்

கும்ப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் அனுகூலமான பலன்களை தரக்கூடிய அமைப்பாக இருப்பதால் எதையும் துணிச்சலுடன் எதிர் கொள்வீர்கள். நீண்ட நாள் இழுபறியில் இருந்த கடன் தொகைகள் வசூலாகும் கூடிய வாய்ப்புகள் உண்டு. திருமணம் போன்ற சுப காரியங்கள் தடைகளுக்கு பின் வெற்றி உண்டாகும். கணவன் மனைவி இடையே இதுவரை இல்லாத புரிதல் உண்டாகும். பிள்ளைகளால் மன மகிழ்ச்சி தரும் சம்பவங்கள் நடைபெறும்.

மீனம்

மீன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் மன ரீதியான போராட்டங்களை எதிர்கொள்வதற்கு வாய்ப்புகள் உண்டு. நீங்கள் அதிகம் நம்பும் ஒருவரை தவறாக புரிந்து கொண்டு குழப்பம் அடைவீர்கள். எதையும் ஒரு முறைக்கு பலமுறை தீர ஆலோசித்து முடிவு எடுப்பது நல்லது. தொழில் மற்றும் வியாபாரத்தில் முன்னேற்றம் சிறப்பாக இருக்கும். உத்தியோகத்தில் பணிபுரிபவர்களுக்கு சக நண்பர்கள் மூலம் ஆதாயம் உண்டு. பெண்கள் புதிய விஷயங்களைக் கற்றுக்கொள்வதில் ஆர்வம் செலுத்துவீர்கள். அம்பிகை வழிபாடு ஏற்றத்தைத் தரும்.