இன்றைய ராசி பலன் – 13-1-2021

மேஷம்

மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் மனதில் புதுவிதமான உற்சாகத்துடன் காணப்படுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு எதிர்பாராத திடீர் பண வரவு உண்டாகும். தொழில் மற்றும் வியாபாரம் சிறப்பாக நடைபெறும். பெண்களுக்கு வேலை பளு அதிகரிக்கும் வாய்ப்புகள் உண்டு.

ரிஷபம்

ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எதையும் துணிச்சலுடன் எதிர்கொள்ளும் தன்னம்பிக்கை பிறக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு புதிய எண்ணங்கள் உதயமாகும். தொழில் மற்றும் வியாபாரத்தில் எதிர்பார்த்த அளவிற்கு கூடுதல் லாபம் பெறுவீர்கள். பெண்கள் சுறுசுறுப்புடன் நடந்து கொள்வீர்கள்.

மிதுனம்

மிதுன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் அனைவரும் பாராட்டும்படி நடந்து கொள்வீர்கள். குடும்பத்தில் குதூகலம் குறைவிருக்காது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மேல் அதிகாரிகளின் ஆதரவு திருப்திகரமாக அமையும். தொழில் மற்றும் வியாபாரத்தில் மந்த நிலை மாறி பணவரவு சிறப்பாக அமையும்.

கடகம்

கடக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எதிலும் கவனம் தேவை. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பணிச்சுமை அதிகரித்தாலும் உங்களின் வேலைகளை சிறப்பாக செய்து முடித்து விடுவீர்கள். தொழில் மற்றும் உத்தியோகத்தில் டென்ஷன் அதிகரிக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிறைந்து இருக்கும்.

சிம்மம்

சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எதிர்பார்த்த யோகம் உண்டாகும். திடீர் பணவரவு மன மகிழ்ச்சியை உண்டாக்கும். உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு நண்பர்களின் ஆதரவு கிடைக்கும். தொழில் மற்றும் வியாபார ரீதியான கொடுக்கல் வாங்கல் சிறப்பாக அமையும் என்றாலும் கவனமுடனிருப்பது நல்லது.

கன்னி

கன்னி ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் குடும்பத்தில் மகிழ்ச்சி நிறைந்திருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு சுமூகமான சூழ்நிலை காணப்படும். தொழில் மற்றும் வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும் என்றாலும் வீண் விரயங்கள் தவிர்ப்பது நல்லது. பொருளாதார ரீதியான ஏற்றம் சீராக இருக்கும்.

துலாம்

துலாம் ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நன்மைகள் நடக்கக் கூடிய அற்புதமான நாளாக இருக்கின்றது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு உற்சாகம் இருக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் வேலை பளு அதிகரித்து காணப்படும் என்பதால் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. பணவரவு சீராக இருக்கும். ஆரோக்கிய ரீதியான பிரச்சனைகள் தோன்றி மறையும்.

விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உற்றார் உறவினர்களின் ஆதரவு கிடைக்கும். கணவன் மனைவிக்கு இடையே இருந்த சண்டை சச்சரவுகள் நீங்கும். குடும்பத்தில் ஒற்றுமை பலப்படும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மனநிம்மதி இருக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் சிறப்பான முன்னேற்றம் கிடைக்கப்பெறும்.

தனுசு

தனுசு ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் யோகம் தரும் அமைப்பாக இருக்கிறது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு எதிர்பார்த்த விஷயங்கள் எல்லாம் நடைபெறும். தொழில் மற்றும் வியாபார ரீதியான கொடுக்கல் வாங்கல் சிறப்பாக அமையும். பெரிய தொகைகளை ஈடுபடுத்தி அதிக லாபம் காணலாம். கணவன் மனைவியிடையே சிறுசிறு வாக்குவாதங்கள் நடைபெற வாய்ப்புகள் உண்டு.

மகரம்

மகர ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் தேவையான ஓய்வு எடுத்துக்கொள்வது நல்லது. புதிய கத்தில் இருப்பவர்களுக்கு வேலைப்பளு அதிகரித்து காணப்படும். தொழில் மற்றும் வியாபார ரீதியான பிரச்சனைகள் நீங்கி நிம்மதி இருக்கும். பண வரவு சிறப்பாக இருப்பதால் வீட்டுத் தேவைகளை எளிதாக பூர்த்தி செய்வீர்கள்.

கும்பம்

கும்ப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நீங்கள் நினைத்ததை நினைத்தபடியே அப்படியே நடக்கும். மனதில் இருந்த கவலைகள் நீங்கி புது உற்சாகம் பிறக்கும். உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு நண்பர்களின் ஆதரவு கிடைக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் போட்ட முதலீடுகளுக்கு உரிய லாபம் கிடைக்கப்பெறும். உங்களுடைய கடன் தொகைகள் குறைவதற்கு வழிகள் பிறக்கும்.

மீனம்

மீன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் பணவரவு சிறப்பாக இருக்கும் என்பதால் குடும்பத்தில் உற்சாகத்திற்கு குறைவிருக்காது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். தொழில் மற்றும் வியாபார ரீதியான முன்னேற்றம் அடுத்த படிக்கு செல்லும். பெண்களுக்கு தன்னம்பிக்கை அதிகரிக்கும். கணவன்-மனைவி இடையே அன்பு பெருகும்.

x