இன்றைய ராசி பலன் 12-01-2021

மேஷம்

மேஷ ராசிக்காரர்களுக்கு இந்த நாள் மிகவும் அற்புதமான நாளாக இருக்கப் போகின்றது. வேலை செய்யும் இடத்தில் உங்களுடைய பொறுப்புகள் கொஞ்சம் அதிகரிக்கும். தொழிலில் நல்ல முன்னேற்றம் இருக்கும் மகிழ்ச்சியான சூழ்நிலை நிலவும்.

ரிஷபம்

ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் கொஞ்சம் சுமாரான நாளாகத்தான் இருக்க போகின்றது. அவ்வப்போது சிக்கல்கள் வந்தாலும், மன தைரியத்தோடு எதிர்கொண்டால் பிரச்சனைகளிலிருந்து தப்பித்துக் கொள்ளலாம். மன பயம் வேண்டாம். வீண் விவாதத்தை தவிர்த்துக்கொள்ளுங்கள்.

மிதுனம்

மிதுன ராசிக்காரர்களுக்கு இன்று எதிர்ப்பார்ப்பு அதிகமாகவே இருக்கும். உங்களது எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் நல்ல செய்தி ஒன்று உங்களது செவிகளை எட்டும். சந்தோஷத்தில் மூழ்கி இருப்பார்கள். குலதெய்வத்திற்கு நன்றி சொல்லுங்கள்.

கடகம்

கடக ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் சோம்பேறித்தனம் இருக்கும். சோம்பேறி தனத்தை எல்லாம் தள்ளிவைத்துவிட்டு, உற்சாகத்தோடு செயல்பட்டால் வெற்றி நிச்சயம். லாபம் பெற இன்றைக்கு அதிக உழைப்பு தேவை. உற்சாகத்தோடு செயல்பட ஸ்ரீராம ஜெயம் மந்திரத்தை சொல்லுங்கள்.

சிம்மம்

சிம்மராசிக்காரர்களுக்கு இன்று புகழ் கிடைக்கப் போகின்றது. உங்களை சுற்றி இருப்பவர்கள் பாராட்டும் அளவிற்கு உங்களது வேலை சுத்தமாகவும், சுறுசுறுப்பாகவும் இருக்கும். சந்தோஷத்திலும், வெற்றியிலும், தலைகனம் வந்துவிடக்கூடாது என்பதையும் நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.

கன்னி

கன்னி ராசிக்காரர்கள் இன்று கவனத்தோடு செயல்பட வேண்டியது அவசியம். எந்த ஒரு விஷயத்திலும் அவசரப்பட்டு முடிவு எடுக்காதீர்கள். பண பரிமாற்றங்களில் ஈடுபடாதீர்கள். யாரை நம்பியும் ஒப்பந்தத்தில் கையெழுத்து போடவேண்டாம். உங்களை யாராவது ஏமாற்றுவதற்கு வாய்ப்பு உள்ளது.

துலாம்

துலாம் ராசிக்காரர்கள் இன்று தெளிவாக செயல்படப் போகிறீர்கள். பல நாள் குழப்பத்திற்கு இன்று தெளிவு கிடைக்க ஒரு பெரிய வாய்ப்பு உள்ளது. சொந்தத் தொழில், அலுவலக பணி எல்லாம் நல்லபடியாக நடக்கும். கவலை வேண்டாம். எல்லாம் இருந்தும் எதையோ இழந்தது போல ஒரு உணர்வு உங்களுக்கு இருக்கும். இறை வழிபாடு செய்யுங்கள்.

விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்று அமோகமான நாளாகத்தான் இருக்க போகின்றது. தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும். மேலதிகாரிகளிடம் அலுவலகத்தில் பாராட்டைப் பெற போகிறீர்கள். கணவன் மனைவி ஒற்றுமை அதிகரிக்கும். சந்தோஷமான நாள் தான் இது.

தனுசு

தனுசு ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் மந்தமான நாளாகத்தான் இருக்க போகின்றது. உங்களது வேலைகளை முன் கூட்டியே முடிக்கப் பாருங்கள். கடைசி சமயத்தில் அவசர அவசரமாக செய்யும் வேலையில் பிரச்சனைகள் வருவதற்கு வாய்ப்பு உள்ளது. முழு கவனத்துடன் எந்த வேலையையும் செய்ய வேண்டும்.

மகரம்

மகர ராசிக்காரர்களுக்கு இந்த நாள் வெற்றி தரும் நாளாக அமையப்போகின்றது. புதிய முயற்சிகளைத் தொடங்கலாம். புதிய முதலீடு செய்யலாம். புதிய வேலைக்கு முயற்சி செய்யலாம். ஆக மொத்தத்தில் நீங்கள் தொட்டதெல்லாம் வெற்றி அடையும்.

கும்பம்

கும்ப ராசிக்காரர்களுக்கு இன்று கவலை நிறைந்த நாளாக இருக்கப் போகின்றது. கஷ்டம் இல்லை. நீங்கள் செய்த வேலைக்கு வேறு ஒருவர் பாராட்டி தட்டிச் செல்ல போகிறார்கள். அதை பார்க்கும்போது கொஞ்சம் வருத்தம் இருக்கத்தான் செய்யும். நாளை சரியாகிவிடும்.

மீனம்

மீன ராசிக்காரர்களுக்கு இன்று மங்களகரமான நாளாக அமையப்போகின்றது. உங்களுடைய வீட்டில் உறவினர்களின் வருகை இருக்கும். சுபகாரியப் பேச்சுக்கள் தொடங்க ஆரம்பிக்கும். உங்கள் கையால் ஏதேனும் மங்களகரமான, ஆன்மீக ரீதியான காரியத்தை செய்வதற்கு வாய்ப்புகள் நிறைய உண்டு.

x