இன்றைய ராசி பலன் – 11-1-2021

மேஷம்

மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் சாதகமற்ற அமைப்பு என்பதால் சவாலான விஷயங்களை தவிர்ப்பது நல்லது. தொழில் மற்றும் வியாபாரத்தில் கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்ற முயற்சி செய்யுங்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மேலதிகாரிகளின் மூலம் பிரச்சனைகள் வரலாம். பெண்கள் கவனமுடன் செயல்படவேண்டிய நாளாக இருக்கிறது.

ரிஷபம்

ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உங்கள் அறிவாற்றல் சிறப்பாக இருக்கும். புதிய சிந்தனைகள் பிறக்கக் கூடிய அற்புதமான வாய்ப்புகள் உண்டாகும். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருந்துவந்த மந்தநிலை மாறி பணவரவு உயரும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலைப்பளு அதிகரிக்கும் இதனால் டென்ஷன் ஏற்படலாம். முருகப்பெருமானை மனதில் நினைத்தால் நல்லது நடக்கும்.

மிதுனம்

மிதுன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உங்களுடைய சாதுர்யமான பேச்சால் வெற்றிகளைப் பெறுவீர்கள். குடும்பத்தில் இருக்கும் முக்கிய நபர்களுடன் கருத்து வேறுபாடுகள் உருவாக வாய்ப்புகள் உண்டு என்பதால் எச்சரிக்கை தேவை. தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு உங்களுடைய தகுதியை உயர்த்திக் கொள்வது நல்லது.

கடகம்

கடக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் பொருளாதார ரீதியான ஏற்ற இறக்கத்தை சமாளிக்க போராடுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு புதிய சலுகைகள் மற்றும் திறமைக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் நீண்டநாள் எதிர்பார்ப்புகள் பூர்த்தியாக வாய்ப்புகள் உண்டு. கணவன் மனைவியிடையே சிறுசிறு சண்டை சச்சரவுகள் ஏற்பட்டு மறையும்.

சிம்மம்

சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எடுக்கும் முயற்சிகள் காலதாமதம் தரும். சுபகாரிய முயற்சிகள் கைகூடி வரும். மனதிற்கு பிடித்தவர்கள் நல்ல செய்திகள் சொல்வார்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு கூட்டாளிகள் மூலம் சில தேவையில்லாத பிரச்சினைகள் ஏற்படலாம். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு உங்களுடைய வேலைகளை சிறப்பாக செய்து முடிப்பீர்கள்.

கன்னி

கன்னி ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் பூர்வீக சொத்துக்கள் மூலம் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். வாகன ரீதியான பயணத்தில் எச்சரிக்கை தேவை. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு புதிய வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும் சந்தர்ப்பங்கள் அமையும். தொழில் மற்றும் வியாபாரத்தில் கூட்டாளிகளுடன் ஒத்துழைப்பு கிடைக்கும். கணவன் மனைவி இடையே நெருக்கம் அதிகரிக்க வாய்ப்புகள் உண்டு.

துலாம்

துலாம் ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் சகோதர சகோதரி வழியே அனுகூலமான பலன்கள் கிடைக்க பெறுவீர்கள். கணவன் மனைவிக்கு இடையே இருந்த மனக்கசப்புகள் நீங்க ஒருவரை ஒருவர் விட்டு கொடுத்து செல்வது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு சுறுசுறுப்புடன் பணிகளை முடிக்க கூடிய வாய்ப்புகள் உண்டு. தொழில் மற்றும் வியாபாரத்தில் புதிய அறிமுகம் கிடைக்கும்.

விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் பலருடைய கேலிப் பேச்சுக்கு செவி சாய்க்காமல் தன்னம்பிக்கையுடன் செயல்பட்டால் வெற்றி நிச்சயம். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டிய நாளாக அமைய இருக்கிறது. தொழில் மற்றும் வியாபாரத்தில் உங்களுடைய மதிப்பும், மரியாதையும் அதிகரிக்க வாய்ப்புகள் உண்டு. ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள்.

தனுசு

தனுசு ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் விடாப்பிடியான முயற்சிகள் மூலம் வெற்றி இலக்கை அடைவீர்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் பணம் பல வழிகளில் கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு போட்டி பொறாமைகள் குறைந்து நிம்மதி கிடைக்கும். கணவன் மனைவி இடையே புரிதல் ஏற்பட சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

மகரம்

மகர ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் தன்னம்பிக்கையுடன் செயல்பட வேண்டிய அற்புதமான நாளாக அமையும். சமூகத்தின் மீதான உங்களுடைய பார்வை மாறும். தொழில் மற்றும் வியாபாரத்தில் கூட்டாளிகளின் ஆதரவு கிடைக்கும். பெரிய முதலீடுகள் செய்து லாபம் காண்பீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வதற்கான வாய்ப்புகள் உண்டாகும்.

கும்பம்

கும்ப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உங்களுடைய நடவடிக்கைகளில் சில மாற்றங்களை காணலாம். மற்றும் அசையா சொத்துக்கள் வாங்கும் முயற்சியில் அனுகூல பலன்களை காண்பீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு சக ஊழியர்கள் உங்களை பாராட்டும்படி நடந்துக் கொள்வீர்கள். சுய தொழில் புரிபவர்களுக்கு ஏற்றம் தரும் நாளாக அமையும்.

மீனம்

மீன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உடல் சோர்வு நீங்கி உற்சாகத்துடன் காணப்படுவீர்கள். குடும்பத்தில் இருந்து வந்த சண்டை சச்சரவுகள் நீங்கப் பெறும். பிள்ளைகள் மூலம் சுபச் செய்திகள் கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு புதிய வாய்ப்புகள் உங்களைத் தேடி வரலாம். கிடைக்கும் வாய்ப்புகளை சரியாக பயன்படுத்திக் கொள்வதன் மூலம் ஏற்றம் பெறலாம். சுய தொழிலில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும்.

x