இன்றைய ராசி பலன் – 24-09-2020

மேஷம்

மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் குடும்பப் பொறுப்புகள் அதிகரிக்கக் கூடிய நாளாக அமைய இருக்கிறது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு தேவையற்ற அலைச்சல்கள் ஏற்படக்கூடும். தொழில் மற்றும் வியாபாரம் செய்பவர்களுக்கு பணம் கொடுக்கல் வாங்கல் தொடர்பான விஷயங்களில் ஏமாற்றம் உண்டாக வாய்ப்புகள் உண்டு என்பதால் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. மனைவி மற்றும் குழந்தைகள் இடத்தில் பேச்சில் இனிமை இருந்தால் மன அமைதி பிறக்கும்.

ரிஷபம்

ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் அதிகம் பொறுமையுடன் இருப்பது அவசியம். தொழில் மற்றும் வியாபாரம் செய்பவர்கள் வாடிக்கையாளர்கள் இடத்தில் கனிவுடன் நடந்து கொள்வது நல்லது. உத்யோகத்தில் சிறுசிறு நெருக்கடிகள் இருந்தாலும் திறம்பட சமாளித்து விடுவீர்கள். கணவன் மனைவி இடையே ஒற்றுமை அதிகரிக்கும்.

மிதுனம்

மிதுன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நிறைய விஷயங்களை கற்றுக் கொள்வீர்கள். திருமணம் போன்ற சுப காரியங்கள் சாதகமான பலன்களைத் தரும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உங்களுடைய பலவீனம் எது என்பதை அறிவீர்கள். உத்தியோகத்தில் சக பணியாளர்கள் மூலம் நல்லது நடக்கும். சகோதர சகோதரிகள் வழியே ஆதாயம் உண்டு. கணவன் மனைவி இடையே அன்பு அதிகரிக்கும்.

கடகம்

கடக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உங்களின் மதிப்பும் மரியாதையும் உயரக்கூடும். குடும்ப பொறுப்புகள் அதிகரிக்க வாய்ப்புகள் உண்டு. பொருளாதார ரீதியான விஷயத்தில் ஏற்ற இறக்கம் காணப்பட்டாலும் எளிதாக சமாளிப்பீர்கள். உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு மேலதிகாரிகள் உங்களுக்கு சாதகமாக செயல்படுவார்கள். வழக்கு தொடர்பானவற்றில் சாதக பலன் கிடைக்கும்.

சிம்மம்

சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எதிர்பார்த்தவை நடக்காமல் போக வாய்ப்புகள் உண்டு. நீங்கள் எதிர்பார்த்தது ஒன்றாகவும் நடப்பது ஒன்றாகவும் இருக்கும். நண்பர்களின் மூலம் ஆதாயம் காணலாம். தொழில் மற்றும் வியாபார ரீதியான போட்டிகள் குறையும் வாய்ப்புகள் உண்டு. பொருளாதாரப் பிரச்சினைகளை சமாளிக்க ஆடம்பர தேவைகளை குறைத்துக் கொள்வது நல்லது.

கன்னி

கன்னி ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உழைப்பிற்கு ஏற்ற அங்கீகாரம் கிடைக்கும் இனிய நாளாக இருக்கும். இதுவரை கிடைக்காதா என ஏங்கிய சில விஷயங்கள் சாதகமான பலன்களை தரும். தொழில் மற்றும் வியாபாரத்தில் கூட்டாளிகளை இணைத்துக் கொள்வீர்கள். உத்தியோகத்தில் சக பணியாளர்கள் மூலம் தேவையில்லாத பிரச்சனைகளை சந்திப்பீர்கள். ஒரு சிலருக்கு வெளியூர் பயணங்களால் அலைச்சல் அதிகரிக்கலாம்.

துலாம்

துலாம் ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் குழப்பங்கள் நீங்கள் கூடிய நாளாக அமைய இருக்கிறது. கணவன் மனைவிக்கு இடையே இருந்த மன சங்கடங்கள் நீங்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிறைந்து இருக்கும். தொழில் மற்றும் வியாபார ரீதியான விஷயத்தில் புதிய முதலீடுகளைச் செய்வீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் ஒத்துழைப்பு கிடைக்கும். பெண்களுக்கு நினைத்த காரியங்கள் அப்படியே நடக்கும்.

விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் செய்யும் காரியங்களில் தடை தாமதங்கள் ஏற்படலாம் என்பதால் கவனமாக இருப்பது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்கள் தான் உண்டு தன் வேலையுண்டு என்று இருப்பது தான் நல்லது. தொழில் மற்றும் வியாபாரத்தில் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். புதிய முதலீடுகள் மூலம் லாபம் அதிகரிக்கும். போட்டி பொறாமைகள் குறையும். பிள்ளைகளின் எதிர்காலம் குறித்த கவலை காணப்படும்.

தனுசு

தனுசு ராசிகாரர்களுக்கு இன்றைய நாள் வீண் விரயங்கள் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உண்டு. உடல் ஆரோக்கியம் தொடர்பான விஷயத்தில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு அசதி, சோர்வு போன்றவற்றால் வேலையில் கவனம் இல்லாமல் போகலாம். தேவையான ஓய்வு எடுத்துக் கொள்வது நல்லது. சுபகாரிய முயற்சிகளில் தாமத மான பலன் கிடைத்தாலும் இறுதியில் வெற்றி கிடைக்கும்.

மகரம்

மகர ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எதையும் துணிச்சலுடன் எதிர் கொள்வீர்கள். பெற்றோர்களின் ஆதரவு கிடைக்கும். வேலை தேடுபவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மேலதிகாரிகளின் ஆதரவால் முன்னேற்றம் அடைவீர்கள். உங்களின் சமூக மதிப்பு அதிகரிக்க கூடிய சாத்தியக்கூறுகள் உண்டு. உங்களால் முடிந்த அளவுக்கு யாருக்காவது சாப்பாடு வாங்கிக் கொடுங்கள் மன அமைதி பிறக்கும்.

கும்பம்

கும்ப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் இறை வழிபாடுகளில் அதிக ஆர்வம் காணப்படும். பெரிய மனிதர்களின் நட்பு கிடைக்கும். தொழில் மற்றும் வியாபார ரீதியான விஷயங்களில் வேலையாட்கள் ஒத்துழைப்பு சிறப்பாக இருக்கும். உத்தியோகத்தில் பணிபுரிபவர்கள் புதிய பொறுப்புகளை ஏற்பீர்கள். குடும்பத்தில் கணவன் மனைவி இடையேயான கருத்து வேறுபாடுகள் நீங்கி அன்பு பெருகும்.

மீனம்

மீன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நண்பர்களின் ஆதரவும் தக்க சமயத்தில் கிடைக்கும். பொருளாதார ரீதியான சிக்கல்களை சமாளிக்க கடன் வாங்க நேரலாம். ஆடம்பர செலவுகளை குறைத்து சிக்கனத்தை கடைபிடிப்பது நல்லது. உத்தியோகத்தில் பணிபுரிபவர்களுக்கு சுமூகமான சூழ்நிலை காணப்படும். மற்றும் அசையா சொத்துக்கள் வாங்கும் முயற்சிகளில் அனுகூலமான பலன்கள் உண்டு.