இன்றைய ராசி பலன் – 8-1-2021

மேஷம்

மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் மனதிற்கு பிடித்தமான நிகழ்வுகள் நடை பெறுவதற்கு வாய்ப்புகள் உண்டு. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு உங்களுடைய பலம் எது பலவீனம் எது என்பதை உணரும் காலம் இது. தொழில் மற்றும் வியாபாரம் செய்பவர்கள் எடுத்த முயற்சிகளில் காலதாமதமான பலன்களை பெறுவீர்கள். எதிலும் பொறுமை அதிகம் தேவை. ராகு கால துர்க்கை பூஜை மேற்கொண்டால் வெற்றி நிச்சயம்.

ரிஷபம்

ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் இறை வழிபாடுகளில் அதிக ஆர்வத்துடன் காணப்படுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு சக பணியாளர்களின் மூலம் அனுகூலமான பலன்கள் கிடைக்க பெறுவீர்கள். குடும்பத்தில் பொருளாதார ஏற்ற இறக்கங்களை சமாளிக்க தன்னம்பிக்கை பிறக்கும். வாய்ப்புகள் உங்களை நோக்கி வருவதற்கு உரிய சந்தர்ப்பங்கள் இருக்கிறது. சுய தொழிலில் நீங்கள் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும்.

மிதுனம்

மிதுன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் குடும்பத்தில் இதுவரை இருந்து வந்த தீராத பிரச்சனைகள் எல்லாம் தீர்வதற்கு உரிய வாய்ப்புகள் அமையும். சகோதர சகோதரிகளுக்கு இடையே இருந்த மனக்கசப்புகள் நீங்கி ஒற்றுமை மேலோங்கும். சுய தொழிலில் மந்த நிலை காணப்படும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு உடல் சோர்வு ஏற்பட வாய்ப்புகள் உள்ளது. ஆரோக்கிய ரீதியான பிரச்சனைகளை சமாளிக்க உணவு கட்டுப்பாட்டை மேற்கொள்வது நலம் தரும்.

 

கடகம்

கடக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நீங்கள் எதிர்பார்க்கும் நல்ல விஷயங்கள் தடையின்றி நடைபெற வாய்ப்புகள் உண்டு. மனதிற்கு பிடித்தவர்கள் மூலம் நல்ல செய்திகளை பெறுவீர்கள். சுபகாரியங்கள் கைகூடி மகிழ்ச்சியை ஏற்படுத்தும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மேலதிகாரிகளின் தொந்தரவு வெறுப்பை உண்டாக்கும் வகையில் அமையலாம். சுயதொழில் புரிபவர்கள் பணியாளர்களை அனுசரித்து செல்வதன் மூலம் ஏற்றம் பெறலாம்.

சிம்மம்

சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் தேவை இல்லாத வாக்குவாதங்களை தவிர்ப்பது உத்தமம். நீங்கள் உண்டு உங்கள் வேலை உண்டு என்று வேலையில் மட்டும் கவனம் செலுத்தினால் மன அமைதி பெறலாம். தொழில் மற்றும் வியாபாரத்தில் ஈடுபட்டு உள்ளவர்களுக்கு கொடுக்கல்-வாங்கலில் எச்சரிக்கை தேவை. சுவாசம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் இருப்பதால் கவனமாக இருப்பது நல்லது.

கன்னி

கன்னி ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எதிர்பாராத யோகம் உண்டாவதற்கு வாய்ப்புகள் உண்டு. பூர்வீக சொத்துக்கள் மூலம் ஒரு சிலருக்கு அனுபவமுள்ள பலன் கிடைக்கும். வீடு மனை வாங்கும் முயற்சியில் இருப்பவர்களுக்கு சாதகப் பலன்கள் உண்டாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு சக நண்பர்களின் ஆதரவு கிடைக்கப் பெறுவீர்கள். தொழில் மற்றும் வியாபாரம் சிறப்பாக அமைய இருக்கிறது.

 

துலாம்

துலாம் ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் அதிர்ஷ்டமான நாளாக இருக்கும். கணவன் மனைவியிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். பிள்ளையை பற்றிய கவலை மேலோங்கி காணப்படும். தொழில் மற்றும் வியாபாரத்தில் லாபம் இரட்டிப்பாகும் வாய்ப்புகள் உண்டு. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு சுறுசுறுப்புடன் வேலை செய்யக்கூடிய இனிய நாளாக அமையும்.

விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் கவலைகள் மறையக் கூடிய அற்புதமான நாளாக அமைய இருக்கிறது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மன உளைச்சல் நீங்கி உற்சாகத்துடன் காணப்படுவீர்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் சிறப்பான முன்னேற்றம் இருக்கும். தந்தைவழி மூலம் அனுகூல பலன்கள் உண்டாகும்.

தனுசு

தனுசு ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் சாதகமற்ற அமைப்பு என்பதால் ஒருமுறைக்கு இருமுறை ஆலோசித்து எந்த ஒரு முடிவையும் எடுப்பது மிகவும் நல்லது. மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்கள் பெரிய தொகையை ஈடுபடுத்தி செய்யும் முயற்சிகளை தள்ளிவைப்பது உத்தமம். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நீண்டநாள் நண்பர்களை சந்திக்கும் வாய்ப்புகள் உண்டாகும்.

மகரம்

மகர ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உங்கள் பிரச்சனைகளை எதிர்கொள்ளும் தைரியம் பிறக்கும். இதுவரை நீங்கள் சந்தித்து வந்த வம்பு வழக்குகள் முடிவுக்கு வரும். தொழில் மற்றும் வியாபாரத்தில் எதிர்பார்த்த அளவிற்கு லாபம் கிடைக்காவிட்டாலும் பொருட் தேக்கம் ஏற்படாது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மேலதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். சில தெரியாத விஷயங்களை கற்றுக் கொள்வதற்கு வாய்ப்புகளும் அமையும்.

கும்பம்

கும்ப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறுவதற்கு வாய்ப்புகள் உண்டு. தொழில் மற்றும் வியாபாரம் செய்பவர்கள் கூடுதல் உழைப்பை கொடுத்தால் முன்னேற்றத்தை காணலாம். உத்தியோகத்தில் இருப்பவர்கள் பழிச் சொற்களை ஏற்கக் கூடிய சந்தர்ப்பங்கள் உருவாகும் என்பதால் எச்சரிக்கை தேவை. குடும்பத்தில் அமைதி நிலவ விட்டுக் கொடுத்து செல்வது நல்லது.

மீனம்

மீன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் கணவன் மனைவி இடையே இருந்த சண்டை சச்சரவுகள் நீங்கப் பெறும். பிள்ளைகள் மூலம் உள்ளம் மகிழும் சம்பவங்கள் நடைபெறும். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு புதிய நுணுக்கங்களை கற்றுக் கொள்ளும் வாய்ப்புகள் உண்டாகும். வேலை இல்லாதவர்களுக்கு நல்ல வேலை அமையும். பைரவர் வழிபாடு செய்து வாருங்கள் ஜெயம் உண்டாகும்.

x