இன்றைய ராசி பலன் – 7-1-2021

மேஷம்

மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் தடைப்பட்ட திருமண முயற்சிகள் நடை பெறுவதற்கு வாய்ப்புகள் உண்டு. கணவன் மனைவி இடையே ஒற்றுமை அதிகரிக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மனதில் இருந்த பாரம் குறையும். தொழில் மற்றும் வியாபாரத்தில் கொடுக்கல்-வாங்கல் திருப்திகரமாக இருக்கும். பொருளாதாரப் பிரச்சினைகள் விலகும்.

ரிஷபம்

ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் தொடர்ந்து முயற்சி செய்து வந்தால் வெற்றிகள் குவிப்பீர்கள். அருகே ரீதியான விஷயத்தில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு கடன் பிரச்சனை படிப்படியாகக் குறையும் வாய்ப்புகள் உண்டாகும். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்கள் மனரீதியான பயணத்தில் எச்சரிக்கை தேவை. புதிய தொழில் துவங்குபவர்களுக்கு ஆலோசனை கிடைக்கும்.

மிதுனம்

மிதுன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எதிர்பாராத பயணங்கள் மூலம் அனுகூலமான பலன்கள் கிடைக்க வாய்ப்புகள் உண்டு. சகோதர சகோதரிகளுக்கு இடையே ஒற்றுமை ஓங்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு மனக்குழப்பம் நீடிக்கும் வாய்ப்புகள் உண்டு. தெளிவான சிந்தனை பெற விநாயகரை வணங்குங்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு புதிய கடன்கள் வாங்குவதை தவிர்ப்பது உத்தமம்.

கடகம்

கடக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் கணவன்-மனைவிக்குள் இருந்த கருத்துவேறுபாடு அதிகரிக்க வாய்ப்புகள் உண்டு என்பதால் எச்சரிக்கை தேவை. கூடுமானவரை நிதானத்துடன் செயலாற்றுவது நன்மை தரும். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு சிறப்பான முன்னேற்றம் இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலைப்பளு அதிகரித்தாலும் எடுத்த முயற்சியில் வெற்றி கிடைக்கும்.

சிம்மம்

சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எதிலும் திருப்தி இல்லாத உணர்வு ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உண்டு. சகோதர சகோதரிகளுக்கு இடையே சிறுசிறு குழப்பங்கள் தோன்றி மறையும். கணவன் மனைவிக்கு இடையே வந்த சண்டை சச்சரவுகள் நீங்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பெரிய மனிதர்களின் அறிமுகம் கிடைக்க வாய்ப்புகள் உண்டு. மற்றும் வியாபாரத்தில் இருந்த மந்த நிலை மாறும்.

கன்னி

கன்னி ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எதிர்பாராத அமைதி காணப்படும். பூதாகரமாக வெடிக்க வேண்டிய விஷயங்கள் எல்லாம் ஒன்றுமில்லாமல் போய்விடும். உத்யோகத்தில் இருப்பவர்கள் கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. உடனிருப்பவர்களை ஏமாற்றக் கூடிய வாய்ப்புகள் உண்டு. தொழில் மற்றும் வியாபாரத்தில் மந்த நிலை காணப்படும்.

துலாம்

துலாம் ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உங்களுடைய அனுபவத்தில் நீங்கள் சந்தித்த பிரச்சினைகள் அசை போட்டு பார்ப்பீர்கள். கணவன் மனைவி இருவருக்கும் இடையே இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்க ஒருவரை ஒருவர் மனம் விட்டு பேசுவது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பெரிய அளவில் மாற்றமும் முன்னேற்றமும் உண்டாகும். சுய தொழிலில் அதிக லாபம் கிடைக்கும்.

விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எதிர்வரும் தடைகளை எளிதாக சமாளிக்க கூடிய தைரியம் பிறக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பணவரவில் தடை ஏற்பட வாய்ப்புகள் உண்டு. தொழில் மற்றும் வியாபாரத்தில் நண்பர்களின் ஆலோசனை உதவிகரமாக அமையும். புதிதாக கடன் வாங்க நினைப்பவர்கள் அதனைத் தவிர்த்துக் கொள்வது உத்தமம்.

தனுசு

தனுசு ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் தனுசு ராசி காரர்களுக்கு இன்றைய நாள் பணம் வந்த வழியே திரும்பிச் செல்லும் வாய்ப்புகள் உண்டு. மரபு அதிகரித்தாலும் அதற்கு மீறிய செலவுகளும் வந்துவிடும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நண்பர்கள் மூலம் ஆதாயம் கிடைக்கும். சுயதொழில் புரிபவர்களுக்கு அமைதியான சூழலும், பணம் சேமிப்பும் ஏற்படும்.

மகரம்

மகர ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் இதுவரை நீங்கள் சந்தித்து வந்த பிரச்சனைகளில் இருந்து வெளி வருவதற்கு வாய்ப்புகள் உண்டு. கிடைக்கும் வாய்ப்புகளை சரியாக பயன்படுத்திக் கொண்டால் நல்லது நடக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உண்டு. உங்களுடைய நியாயத்தில் உறுதியாக நின்றால் முன்னேற்றம் உண்டாகும். சுயதொழில் லாபம் தரும்.

கும்பம்

கும்ப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் சுபச்செலவுகள் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உண்டு. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு கொடுக்கல் வாங்கல் தொடர்பான விஷயத்தில் கவனமுடன் இருப்பது நல்லது. மேல் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். சுய தொழில் புரிபவர்களுக்கு மூன்றாம் நபர்களின் பிரச்சனையை தவிர்ப்பது நல்லது. உங்கள் வேலையில் கவனம் செலுத்தினால் அமைதி உண்டாகும்.

மீனம்

மீன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எதிர்பாராத நிகழ்வு ஒன்று நடை பெறுவதற்கு வாய்ப்புகள் உண்டு. உங்களின் நீண்டநாள் கனவுகள் நிறைவேறுவதற்கு சந்தர்ப்பங்கள் அமையும். சுபகாரிய முயற்சிகளில் உள்ளவர்களுக்கு வெற்றி கிடைக்கும். தொழில் மற்றும் வியாபாரம் செழிப்பாக இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பணவரவு ஏற்ற இறக்கமாக இருக்கும் என்றாலும் திறம்பட அதனை சமாளிப்பீர்கள்.

x