இன்றைய ராசி பலன் – 4-1-2021

மேஷம்

மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எதிலும் நிதானம் தேவை. தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு புதிய நெளிவு சுளிவுகளை கற்றுக் கொள்ளும் வாய்ப்புகள் அமையும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் தன்னம்பிக்கையுடன் காணப்படுவீர்கள். பெண்கள் எதிர் வரும் சவால்களை சிறப்புடன் கையாள கற்றுக் கொள்வீர்கள்.

ரிஷபம்

ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எடுக்கும் முயற்சிகளில் கவனமுடன் இருப்பது மிகவும் நல்லது. கடன் தொகைகள் வசூலாகும் தேவையில்லாத பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புகள் உண்டு. தொழில் மற்றும் வியாபாரத்தில் இருந்து வந்த போட்டி பொறாமைகள் குறையும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மன அமைதி கிடைக்க சக பணியாளர்களை அனுசரித்து செல்வது நல்லது.

மிதுனம்

மிதுன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உற்சாகத்துடன் காணப்படுவீர்கள்.ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்வதன் மூலம் வீட்டில் சுபிட்சம் நிலைத்து இருக்கும். கணவன்-மனைவி இடையே அன்பு அதிகரிக்க வாய்ப்புகள் உண்டு. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு எதிர்பார்த்த சலுகை கிடைக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உயர்வு இருக்கும்.

கடகம்

கடக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நீங்கள் எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு தேவையில்லாத அலைச்சல்கள் ஏற்பட வாய்ப்புகள் உண்டு. தொழில் மற்றும் வியாபாரத்தில் இருந்து வந்த மறைமுக எதிர்ப்புகள் குறையும். உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் தோன்றி மறையும்.

சிம்மம்

சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் பொருளாதார நெருக்கடியை சந்திக்கும் வாய்ப்புகள் உண்டு. உத்தியோகத்தில் இருப்பவர்கள் தேவையில்லாத வீண் விரயங்களை குறைத்துக் கொள்வது நன்மை தரும். தொழில் மற்றும் வியாபாரத்தில் பணம் தொடர்பான விஷயங்களில் அனுகூல பலன் கிடைக்கும். பெண்கள் இறை வழிபாடுகளில் ஆர்வம் செலுத்துவது மன அமைதி தரும்.

கன்னி

கன்னி ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் முன்கோபத்தை குறைத்துக் கொள்வதன் மூலம் ஏற்றம் பெறலாம். தொழில் மற்றும் வியாபாரத்தில் மற்றவர்களை அனுசரித்து நடந்து கொண்டால் அனுகூல பலன் கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு கூட்டாளிகளின் ஆதரவு கிடைக்கக்கூடிய வாய்ப்புகள் உண்டு. ஆரோக்கியத்தில் எச்சரிக்கை தேவை.

துலாம்

துலாம் ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் குடும்பத்தின் ஒத்துழைப்பு உங்களுக்கு பரிபூரணமாக கிடைக்கும். இதுவரை உங்களை புரிந்து கொள்ளாதவர்கள் புரிந்து கொள்ளும் சூழ்நிலை வரும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு கொடுக்கல் வாங்கல் பிரச்சனைகள் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உண்டு. தொழில் மற்றும் வியாபாரத்தில் போட்டிகளை சமாளிக்க வேண்டி இருந்தாலும் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும்.

விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எதிலும் கவனமுடன் செயல்படுவது பொருளாதாரத்தை சீராக வைத்துக் கொள்ள உதவும். தொழில் மற்றும் வியாபாரத்தில் சாதகமான பலன்கள் கிடைக்கும். பெரிய தொகையை ஈடுபடுத்தி அதிக லாபம் காண்பீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு எதிர்பாராத பயணங்களால் அனுகூலமான பலன்கள் உண்டாகும்.

தனுசு

தனுசு ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் இதுவரை இருந்த பிரச்சனைகள் யாவும் குறைவதற்கான வாய்ப்புகள் அமையும். அரோகிய ரீதியான பிரச்சினைகளை சமாளிப்பீர்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் உங்களுடைய முயற்சிகளுக்கு சிறந்த பலன் கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் எதிர்பாராத இடங்களிலிருந்து எதிர்பாராத வகையில் பணவரவு பெறுவீர்கள்.

மகரம்

மகர ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் தடையில்லாத பணவரவு வீட்டுத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கு உதவும் வகையில் அமையும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்றும் கடமை ஏற்படும். தொழில் மற்றும் வியாபாரத்தில் பேச்சில் நிதானத்தை கடைபிடித்து விட்டுக்கொடுத்து நடந்துகொண்டால் முன்னேற்றம் நிச்சயம்.

கும்பம்

கும்ப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நெருங்கியவர்களின் ஆதரவு மனதிற்கு மகிழ்ச்சியை கொடுக்கும் வகையில் இருக்கும். சுபகாரிய முயற்சிகளில் ஈடுபட்டு உள்ளவர்களுக்கு வீண் அலைச்சல் ஏற்பட வாய்ப்புகள் உண்டு. தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு உற்றார் உறவினர்களின் ஆதரவு கிடைக்கும். உத்தியோகத்தில் மன அமைதி இருக்கும்.

மீனம்

மீன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எதிலும் கவனமுடன் செயல்பட வேண்டியது அவசியமாகும். வெளியிடங்களில் தெரியாத நபர்களிடம் பேச்சுவார்த்தையை தவிர்ப்பது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நண்பர்களின் ஆதரவு தகுந்த சமயத்தில் கிடைக்கும். இதுவரை உங்களுக்கு இருந்து வந்த கடன் பிரச்சனைகள் தீர்வதற்கு வாய்ப்புகள் உண்டாகும். சுய தொழிலில் அதிக லாபம் காண்பீர்கள்.

x