இன்றைய ராசி பலன் – 3-1-2021

மேஷம்

மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் இனிய நாளாக அமைய இருக்கிறது. உங்கள் நீண்ட நாள் கனவு ஒன்று பலிப்பதற்கு வாய்ப்புகள் உண்டு. உத்தியோகத்தில் இருப்பவர்கள் பழைய நண்பர்களை சந்திப்பீர்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் மந்த நிலை காணப்படும் என்றாலும் பொருட் தேக்கம் ஏற்படாது.

ரிஷபம்

ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் சமூகத்தின் மீதான உங்களுடைய பார்வை மாறுவதற்கு வாய்ப்புகள் உண்டு. உத்தியோகத்தில் இருப்பவர்கள் தங்களுடைய பலவீனத்தை அறிந்து கொள்ளும் வாய்ப்புகள் கிடைக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் எதிர்பார்த்த அளவிற்கு லாபம் இல்லை என்றாலும் ஓரளவுக்கு சிறப்பான பலன்கள் கிடைக்கும்.

மிதுனம்

மிதுன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எதிலும் நிதானமாக செயல்பட வேண்டிய கட்டாயம் ஏற்பட வாய்ப்புகள் உண்டு. ஆரோக்கிய ரீதியான பாதிப்புகள் குறைந்து ஆரோக்கியம் மேம்படும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பணிச்சுமை அதிகரிக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் கூடுதல் கவனத்துடன் நடந்து கொள்வது நல்லது.

 

கடகம்

கடக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் இனிய நாளாக அமைய இருக்கிறது.உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு ஊதிய உயர்வை கிடைப்பதற்கான வாய்ப்புகள் உண்டு. கணவன் மனைவியிடையே இருந்த கருத்து வேறுபாடு முடிவுக்கு வரும். தொழில் மற்றும் வியாபாரத்தில் லாபம் சிறப்பாக அமையும்.

சிம்மம்

சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நீங்கள் நினைத்தது நடக்க கூடிய வாய்ப்புகள் உண்டு. குடும்பத்தில் மகிழ்ச்சி நிலைத்து இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் பொருளாதார ரீதியான பிரச்சினைகளை திறம்பட சமாளிப்பீர்கள். தொழில் மற்றும் வியாபாரம் செய்பவர்கள் புதிய யோசனைகளை செயல்படுத்துவீர்கள்.

கன்னி

கன்னி ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எடுக்கும் முயற்சியில் காலதாமதம் ஆனாலும் இறுதியில் வெற்றி கிடைக்கும் வாய்ப்புகள் உள்ளது. திருமண சுபகாரியங்கள் கைகூடி வரும் யோகமுண்டு. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மன நிம்மதி இருக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் மந்த நிலை மாறும்.

துலாம்

துலாம் ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் பூர்வீக சொத்துக்கள் தொடர்பான விஷயங்களில் அனுகூலமான பலன்கள் கிடைக்க பெறும். ஒருசிலருக்கு புதிய பொருள் சேர்க்கை உண்டாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு குடும்பத்துடன் மகிழ்ச்சியுடன் இருப்பதற்கு வாய்ப்புகள் அமையும். தொழில் மற்றும் வியாபாரத்தில் சுமுகமான சூழ்நிலை காணப்படும்.

விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் வாக்குவாதங்களை தவிர்த்து வேலையில் மட்டும் கவனம் செலுத்துவது நல்லது. சகோதர சகோதரிகளுக்கு இடையே மனக்கசப்பு ஏற்பட வாய்ப்புகள் உண்டு என்பதால் பொறுமையை கையாள்வது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு உடல் சோர்வு ஏற்படும். தொழில் மற்றும் வியாபார ரீதியான முன்னேற்றம் சுமாராக இருக்கும்.

தனுசு

தனுசு ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எடுத்த முயற்சிகளில் எதிர்பாராத வெற்றி கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலைப்பளு குறையும். தொழில் மற்றும் வியாபாரத்தில் புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். சுவாசம் தொடர்பான பிரச்சினைகளை ஒரு சிலர் சந்திப்பீர்கள். உணவு கட்டுப்பாட்டை மேற்கொள்வது நலம் தரும்.

மகரம்

மகர ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எதிலும் கவனமுடன் செயல்பட வேண்டியது அவசியமாகும். வாகன ரீதியான பயணங்களில் எச்சரிக்கை தேவை. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு திடீர் பணவரவு அதிர்ஷ்டத்தைக் கொடுக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் போட்டியாளர்களை சமாளிக்க போராடுவீர்கள்.

கும்பம்

கும்ப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நீண்ட நாள் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்த சுப காரியங்களில் கலந்து கொள்ளும் வாய்ப்பு உண்டு. தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு அதிகம் பொறுமை தேவைப்படும் நாளாக இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நண்பர்களின் ஆதரவு கிடைக்கும்.

மீனம்

மீன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எதிர்பாராத திருப்பங்கள் நடைபெறுவதற்கு வாய்ப்புகள் உண்டு. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நீங்கள் ஒன்று நினைக்க அது ஒன்று நடக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் பணியாளர்களை தட்டிக்கொடுத்து வேலை வாங்குவது மூலம் முன்னேற்றத்தை காணலாம். பணம் கொடுக்கல்-வாங்கலில் எச்சரிக்கை தேவை.

x