இன்றைய ராசி பலன் – 2-1-2021

மேஷம்

மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் இனிய நாளாக அமையும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு எதிர்பாராத திடீர் பயணங்கள் செல்வதற்கு வாய்ப்புகள் உண்டு. தொழில் மற்றும் வியாபாரத்தில் மந்த நிலை காணப்படும். இன்றைய நாளில் கூடுமானவரை பொறுமையை கடைபிடிப்பது உத்தமம். கணவன் மனைவிக்கு இடையே நெருக்கம் அதிகரிக்கும்.

ரிஷபம்

ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எதிர்பார்க்கும் யோகம் உண்டாகும். பூமி மனை போன்ற விஷயங்களில் அனுகூலமான பலன்கள் உண்டாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு முதுகுவலி பிரச்சனைகள் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உண்டு. தொழில் மற்றும் வியாபாரத்தில் அனுகூலமான பலன்கள் கிடைக்கப்பெறும்.

மிதுனம்

மிதுன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் சாதகமற்ற அமைப்பு என்பதால் கூடுமானவரை நிதானத்துடன் செயல்படுவது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு தேவையில்லாமல் உணர்ச்சிவசப்படக் கூடிய சந்தர்ப்பங்கள் உருவாகக்கூடும். தொழில் மற்றும் வியாபாரத்தில் பொருட் தேக்கம் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உண்டு.

 

கடகம்

கடக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உற்சாகத்துடன் செயல்பட கூடிய நல்ல நாளாக அமைய இருக்கிறது. நீண்டநாள் நண்பர்களை சந்திக்கும் வாய்ப்புகள் உருவாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலை பளு அதிகரிப்பதால் டென்ஷன் இருக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் புதிய உத்திகளை கையாண்டு முன்னேற்றம் காணலாம்.

சிம்மம்

சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எதிலும் நிதானத்துடன் செயல்பட வேண்டியது அவசியமாகும். கணவன்-மனைவிக்குள் தேவையில்லாத கருத்து வேறுபாடுகள் உருவாகக்கூடும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மன நிம்மதியுடன் இருக்க வேலையில் மட்டும் கவனம் செலுத்தினால் நல்லது. தொழில் மற்றும் வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும்.

கன்னி

கன்னி ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உடல் ரீதியான பாதிப்புகள் மன உளைச்சலை கொடுக்கலாம். உத்யோகத்தில் இருப்பவர்கள் தேவையான ஓய்வு எடுத்துக்கொள்வது நல்லது. தொழில் மற்றும் வியாபார ரீதியான முன்னேற்றம் சிறப்பாக இருக்கும். கணவன் மனைவி ஒருவரை ஒருவர் அனுசரணையாக இருப்பார்கள்.

துலாம்

துலாம் ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் மனதில் நிம்மதியும் புதிய உற்சாகமும் பிறக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு தெளிவான சிந்தனை இருக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உங்களுக்கு கீழ் பணிபுரிபவர்கள் மூலம் அனுகூலமான பலன்கள் உண்டாகும். ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தினால் மிகவும் நல்லது.

விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் குழப்பமான மனநிலை காணப்படும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் எடுக்கும் முடிவுகளில் காலதாமதம் ஏற்பட வாய்ப்புகள் உண்டு. தொழில் மற்றும் வியாபாரத்தில் எந்த ஒரு முடிவையும் ஒருமுறைக்கு பலமுறை யோசித்து விட்டு எடுப்பது நல்லது.

தனுசு

தனுசு ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உங்களுடைய கனிவான பேச்சால் அனுகூலமான பலன்களை பெறுவீர்கள். சொத்து ரீதியான பிரச்சனைகள் முடிவுக்கு வரும். உத்தியோகத்தில் ஒரு சிலருக்கு மேலதிகாரிகளின் மூலம் புதிய விஷயங்களை கற்றுக் கொள்வதற்கு வாய்ப்புகள் கிடைக்கும். தொழில் மற்றும் வியாபாரம் செய்பவர்கள் வாடிக்கையாளர்கள் இடத்தில் நன்மதிப்பு பெற முயற்சி செய்வீர்கள்.

மகரம்

மகர ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எதிர்வரும் அத்தனை தடைகளையும் எளிதாக தகர்த்து விடுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு சக பணியாளர்களின் ஆதரவு கிடைக்கும். உங்கள் திறமைக்கு உரிய அங்கீகாரம் பெற முயற்சி செய்வீர்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் மந்த நிலை மாறி வெற்றிக்கான பாதை பிறக்கும்.

கும்பம்

கும்ப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் முக்கிய முடிவுகளை எடுப்பதற்கு சாதகமான நாளாக அமையும். திருமணம் போன்ற சுபகாரிய முயற்சிகளில் ஈடுபட்டு உள்ளவர்களுக்கு அலைச்சல் இருந்தாலும் வெற்றி கிடைக்கும். கணவன் மனைவியிடையே இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி பரஸ்பரம் அன்பு பெருகும்.

மீனம்

மீன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நன்மைகள் நடைபெற வாய்ப்புகள் உண்டு. சகோதர, சகோதரிகளுக்கு இடையே இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி அன்பு அதிகரிக்கும். குடும்பத்தில் எதிர் பாராத நபர்களின் வருகையால் குதூகலம் இருக்கும். உத்தியோகத்தில் மன அமைதி இருக்கும். வியாபார ரீதியான முன்னேற்றம் எதிர்பார்த்த அளவிற்கு சிறப்பாக இருக்கும்.