இன்றைய ராசி பலன் – 31-12-2020

மேஷம்

மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எதிர்பார்த்த இடத்திலிருந்து பணவரவு கிடைக்க தாமதம் ஏற்படலாம். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு தங்களுடைய பணிகளை சிறப்பாக செய்து முடிப்பதும் மூலம் மன மகிழ்ச்சி அடைவீர்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் மந்த நிலை காணப்பட்டாலும் சுமூகமான சூழ்நிலை நிலவும்.

ரிஷபம்

ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் பணம் கொடுக்கல் வாங்கல் தொடர்பான விஷயத்தில் அனுகூலமான பலன்களைக் காண்பீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு புதிய முயற்சிகள் முன்னேற்றத்தை கொடுக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் வாடிக்கையாளர்கள் இடத்தில் பணிவுடன் நடந்து கொள்வது உத்தமம்.

 

மிதுனம்

மிதுன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் இனம் புரியாத சந்தோஷம் மனதிற்குள் காணப்படும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு சக பணியாளர்களின் ஆதரவு கிடைக்கும். தேவையற்ற வாக்குவாதங்களை தவிர்ப்பது உத்தமம். கணவன்-மனைவிக்குள் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்க விட்டுக் கொடுப்பது நல்லது.

 

கடகம்

கடக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எதிலும் நிதானம் தேவைப்படும் கூடிய நாளாக அமைய இருக்கிறது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மேலதிகாரிகளின் பிடிக்காமல் போகலாம். எதிலும் பொறுமையை கையாள்வது மன அமைதிக்கு வழிவகுக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு போட்டியாக இருக்கும் நபர்களிடம் புது நட்பு பிறக்க வாய்ப்புகள் உண்டு.

சிம்மம்

சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்வதன் மூலம் நன்மைகளை பெறலாம். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலைப்பளு அதிகரிப்பதன் மூலம் டென்ஷன் ஏற்பட வாய்ப்புகள் உண்டு. தொழில் மற்றும் வியாபாரத்தில் மந்த நிலை காணப்பட்டாலும் எதிர்பார்த்த அளவிற்கு முன்னேற்றம் இருக்கும்.

கன்னி

கன்னி ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் வாகன வீதியான பயணங்களால் அனுகூலமான பலன்கள் உண்டாகும். எதிர்பாராத பணவரவு மனமகிழ்ச்சியை ஏற்படுத்தும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நண்பர்களின் ஆதரவு கிடைக்கும். பொருளாதாரத்தை சீர் செய்ய சில புதிய யுக்திகளை கையாளுவீர்கள். சுய தொழிலில் லாபம் சீராக இருக்கும்.

 

துலாம்

துலாம் ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் மனதில் குழப்பங்கள் அதிகரிக்க வாய்ப்புகள் உண்டு. ஒரு விஷயத்தில் முடிவெடுப்பதில் அதிகமாக யோசிப்பீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மன அமைதி குறையும். தொழில் மற்றும் வியாபாரம் சிறப்பாக இருக்கும். கணவன் மனைவி இடையே இருக்கும் உறவில் புதிய புரிதல் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உண்டு.

விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் மூன்றாம் நபர்களிடமிருந்து எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. வெளியிடங்களில் அதிக கவனம் தேவை. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மேலதிகாரிகளின் மூலம் நெளிவு சுளிவுகளை கற்றுக் கொள்வதற்கு வாய்ப்புகள் உண்டு. தொழில் மற்றும் வியாபாரத்தில் பெரிய மனிதர்களின் ஆதரவு கிடைக்கும்.

தனுசு

தனுசு ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். திருமணம் போன்ற சுப காரிய முயற்சிகளில் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு சில தேவையற்ற குழப்பங்கள் மன அமைதியை கெடுக்கும் வகையில் அமையக் கூடும் என்பதால் எச்சரிக்கை தேவை. தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு ஆரோக்கியத்தில் கவனம் தேவை.

மகரம்

மகர ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் கிடைக்கும் வாய்ப்புகளை சரியாக பயன்படுத்திக் கொள்வதன் மூலம் முன்னேற்றம் காணலாம். அசையும் மற்றும் அசையா சொத்துக்கள் வாங்கும் முயற்சிகளில் ஈடுபட்டு உள்ளவர்களுக்கு அனுகூலமான பலன்கள் கிடைக்கும். உத்தியோகத்தில் பணியில் கவனம் தேவை. தொழில் மற்றும் வியாபாரத்தில் பணியாளர்களை அனுசரித்து அதன் மூலம் முன்னேற்றத்தை பெறலாம்.

கும்பம்

கும்ப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் குடும்பத்தில் நிம்மதி நிலைத்து நிற்கும். கணவன் மனைவி இடையே அன்பு அதிகரிக்க வாய்ப்புகள் உண்டு. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு புதிய பாதை பிறக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் கூடுதல் உழைப்பை கொடுப்பதன் மூலம் முன்னேற்றம் காணலாம். பெண்களுக்கு இனிய நாளாக அமையும்.

மீனம்

மீன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் மற்றவர்களை பெரிதாக கவர்ந்து விடுவீர்கள். உங்களுடைய பேச்சுத் திறமை அனைவருக்கும் பிடித்தமானதாக இருக்கும். கணவன் மனைவி இடையே இருந்த சிக்கல்கள் படிப்படியாக நீங்கும். சுய தொழிலில் எதிர்பார்த்த அளவிற்கு லாபம் கிடைக்காவிட்டாலும் ஓரளவுக்கு சுமாரான பலன்கள் உண்டு. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மன அமைதி உண்டு.

x