இன்றைய ராசி பலன் – 21-09-2020

மேஷம்

மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் மனதில் புது விதமான உத்வேகம் பிறக்கும். பிரச்சனைகளை எதிர்கொள்ளக் கூடிய சந்தர்ப்பங்கள் அமையும். எதையாவது சாதிக்க வேண்டும் என்கிற எண்ணம் உங்களிடம் மேலோங்கும். புதிய விஷயங்களைக் கற்றுக் கொள்வதில் ஆர்வம் காட்டுவீர்கள். சுய தொழில் புரிபவர்களுக்கு லாபம் தரும் அமைப்பாக உள்ளது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பணிச்சுமை கூட கூடும்.

ரிஷபம்

ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் மந்தமான சூழ்நிலை நிலவும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு கொடுக்கப்பட்ட பொறுப்புகளை கவனமாக செய்ய வேண்டும். இன்று உங்கள் ராசிக்கு கவனங்கள் சிதற கூடிய அமைப்பு என்பதால் எல்லா விஷயத்திலும் சரியாக தான் செய்கிறோமா? என்பதை ஒரு முறை சிந்தித்து விட்டு செய்வது நல்லது. கணவன் மனைவி இடையேயான ஒற்றுமை அதிகரிக்க கூடும்.

மிதுனம்

மிதுன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் வளமான அமைப்பாக உள்ளது. எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் வளர்ச்சி பாதையை நோக்கி செல்லும். புதிதாக தொழில் துவங்க விரும்புபவர்கள் நல்ல முன்னேற்றம் காணலாம். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு எதிர்பார்த்த வங்கிக் கடன்கள் கிடைக்கப் பெறும். தொழில் செய்பவர்களுக்கு கூட்டாளிகளின் ஆதரவினால் நல்ல லாபம் காண முடியும்.

கடகம்

கடக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எதிர்பார்த்த இடத்தில் இருந்து எதிர்பார்த்த தொகை கைக்கு கிடைக்க கூடும். குடும்பத்தில் மகிழ்ச்சிக்கு குறைவிருக்காது. உற்றார் உறவினர்களின் ஆதரவு பரிபூரணமாக கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வீண் பழிச் சொற்களை ஏற்கும் படியான சூழ்நிலைகள் உருவாகலாம். எனவே எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. சுயதொழில் புரிபவர்கள் புதிய உத்திகளை கையாள்வதன் மூலம் ஏற்றம் பெறலாம்.

சிம்மம்

சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் பிள்ளைகளின் ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டியது அவசியமாக இருக்கும். அசையும் மற்றும் அசையா சொத்துக்களின் மூலம் சிலருக்கு அனுகூலமான பலன்கள் கிடைக்க பெறும். சுய தொழில் புரிபவர்களுக்கு புதிய பொறுப்புகள் சுமக்கக் கூடிய சந்தர்ப்பங்கள் அமையும். பொருளாதார சிக்கல் இருந்தாலும் திறம்பட சமாளித்து முன்னேறுவீர்கள்.

கன்னி

கன்னி ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எதையும் உற்சாகத்துடன் செயலாற்றக் கூடிய அற்புதமான அமைப்பாக இருக்கிறது. உங்களின் வேடிக்கையான பேச்சால் மற்றவர்களைக் கவர்ந்து விடுவீர்கள். புதிய நண்பர்கள் மூலம் புதிய விஷயங்களை எதிர் கொள்ளும் சூழ்நிலை ஏற்படலாம். உங்கள் குடும்பத்தில் இருக்கும் மூத்த நபர்களை அனுசரித்து செல்வதன் மூலம் நல்ல பலன் காண முடியும். பூர்வீக சொத்துக்கள் மூலம் ஒரு சிலருக்கு அனுகூலமான பலன்கள் கிடைக்க பெறும்.

துலாம்

துலாம் ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் பயணங்களின் பொழுது கவனமாக இருக்க வேண்டியது அவசியமாக இருக்கும். எதிர்பாராத திடீர் பயணங்கள் உங்களுக்கு ஏற்படக்கூடும். வாகன ரீதியான பயணங்களில் கூடுதல் கவனத்துடன் இருப்பது நல்லது. சுய தொழில் புரிபவர்களுக்கு எதிர்பார்த்த லாபம் கிடைக்கப் பெறும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மேலதிகாரிகளின் மூலம் தேவையற்ற மன சங்கடங்கள் ஏற்படக்கூடும். பிள்ளைகளின் மூலம் உள்ளம் மகிழும் நிகழ்வுகள் நடை பெறலாம்.

விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் அதிக சோர்வுடன் காணப்படுவீர்கள். உடல் நிலை பாதிப்புகள் பெரிய தொந்தரவாக இருக்கும். தேவையான ஓய்வு எடுத்துக் கொள்வது நல்லது. அயராத உழைப்பினால் உங்களுக்கு கிடைக்க வேண்டிய அங்கீகாரம் கிடைக்க கூடிய அற்புதமான நாளாக இருக்கும். நீண்ட நாள் இழுபறியில் இருந்த கடன் பாக்கிகள் வசூலாகும்.

தனுசு

தனுசு ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் தாராள தன வரவு மன மகிழ்ச்சியை உண்டாக்கும். பொருளாதாரத்தில் ஏற்றமான சூழ்நிலை நிலவுவதால் வீட்டுத் தேவைகளை எளிதில் பூர்த்தி செய்து விடுவீர்கள். பெண்களின் விருப்பங்கள் அனைத்தும் நிறைவேற கூடிய இனிய நாளாக அமைய இருக்கிறது. புதிய பொருட் சேர்க்கை உண்டாகக் கூடும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு சக பணியாளர்கள் உதவிகரமாக இருப்பார்கள்.

மகரம்

மகர ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உற்றார் உறவினர்கள் வழியே அனுகூலமான பலன்கள் உண்டாகும். நண்பர்களின் ஒத்துழைப்பால் புதிய பாதையை நோக்கி பயணிக்க ஆயத்தம் ஆவீர்கள். தொழில் மற்றும் வியாபாரம் செய்பவர்களுக்கு சுமாரான பலன்களே கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு இடமாற்றம், ஊதிய உயர்வு போன்றவை சாதகமான பலன்களைத் தரும்.

கும்பம்

கும்ப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டிய நாளாக இருக்கும். எதையும் ஒரு முறைக்கு பலமுறை சிந்தித்து செயலாற்றுவதே நன்மை தரும். நண்பர்கள் மற்றும் உறவினர்களின் ஆதரவு இருக்கும். திருமணம் போன்ற சுபகாரிய முயற்சிகள் தடையின்றி நிறைவேறும். மனதிற்கு பிடித்தவர்கள் மூலம் மன சங்கடங்கள் உருவாகக்கூடும் என்பதால் கவனமாக இருப்பது நல்லது.

மீனம்

மீன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் கணவன் மனைவி இடையேயான ஒற்றுமை அதிகரிக்கும். குடும்பத்தில் தேவையற்ற வாக்குவாதங்களை தவிர்ப்பதும் மூலம் மன நிம்மதி பெறலாம். அசையும் மற்றும் அசையா சொத்துக்கள் வாங்கும் முயற்சிகளில் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். வியாபார ரீதியான முன்னேற்றம் சீராக இருக்கும். தொழில் துறையில் நவீனகரமான பொருட்களை வாங்குவீர்கள். சுயதொழில் புரியும் பெண்களுக்கு லாபகரமான நாளாக அமையும்.