இன்றைய ராசி பலன் – 20-09-2020

மேஷம்

மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் இனிய நாளாக அமைய இருக்கிறது. எவ்வளவு பிரச்சினைகள் உங்களுக்கு வந்தாலும் அதனை எளிதாக சமாளிக்கும் ஆற்றல் உண்டாகும். நண்பர்கள் உங்களுக்கு அனுகூலமாக இருப்பார்கள். சுய தொழில் புரிபவர்களுக்கு சாதகமான பலன் கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பணிச்சுமை குறையும்.

ரிஷபம்

ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் ஏற்றத்தைத் தரும். குடும்பத்தில் நிம்மதியும், மகிழ்ச்சியும் நிலைத்து இருக்க உங்களின் முன்கோபத்தை குறைத்துக் கொள்வது நல்லது. திருமணம் போன்ற சுப காரிய முயற்சிகளில் தாமத பலன் கிடைக்கும் என்றாலும் வெற்றி உண்டாகும். உற்றார் உறவினர்களின் ஆதரவு கிடைக்கும்.

மிதுனம்

மிதுன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நல்ல நாளாக அமைய இருக்கிறது. வீண் பேச்சுகளை குறைத்துக் கொண்டு உங்கள் வேலையில் கண்ணும் கருத்துமாக இருப்பது நல்லது. அசையும் மற்றும் அசையா சொத்துக்களின் மூலம் அனுகூலமான பலன்கள் கிடைக்க வாய்ப்புகள் அமையும். பொருளாதார ரீதியான சிக்கல்களை சமாளிக்க ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்வது நல்லது.

கடகம்
கடக ராசிகாரர்களுக்கு இன்றைய நாள் ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்த வேண்டிய நாளாக இருக்கும். உடல் சீதோஷன நிலையில் மாற்றம் ஏற்பட வாய்ப்புகள் உண்டு. தொழில் மற்றும் வியாபாரம் செய்பவர்களுக்கு கூட்டாளிகளை அனுசரித்து செல்வதன் மூலம் முன்னேற்றம் காணலாம். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு சக நண்பர்களின் ஆதரவு கிடைக்கும்.

சிம்மம்

சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் வளர்ச்சியை நோக்கி பயணிக்க கூடிய நாளாக இருக்கும். நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியும் ஏற்றத்தில் செல்லக் கூடிய சாத்தியக் கூறுகள் உண்டு. தொழில் மற்றும் வியாபார ரீதியான முன்னேற்றம் சீராக இருக்கும். பொருளாதார சிக்கல்களை சமாளிக்க போராட வேண்டியிருக்கும்.

கன்னி

கன்னி ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உறவினர்களின் வருகையால் மனம் மகிழ கூடிய இனிய நாளாக அமைய இருக்கிறது. புதிய நபர்களை சந்திக்கக் கூடிய வாய்ப்புகள் உண்டு. தொழில் வியாபார ரீதியான பண விஷயத்தில் சற்று எச்சரிக்கையுடன் இருக்க வேண்டியது அவசியமாகும். பெண்கள் இறை வழிபாடுகளில் ஈடுபடுவார்கள். விநாயகரை வழிபட நன்மைகள் நடக்கும்.

துலாம்

துலாம் ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிடைக்க கூடிய அற்புதமான நாளாக இருக்கும். சுபகாரிய முயற்சிகள் வெற்றியில் முடியும். பணம் கொடுக்கல் வாங்கல் தொடர்பான விஷயத்தில் பெரிய தொகைகளை முதலீடு செய்வதன் மூலம் லாபம் காண்பீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு இட மாற்றம் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உண்டு. பூர்வீக சொத்துக்கள் மூலம் அனுகூலமான பலன்களைப் பெறுவீர்கள்.

விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் மனதில் நினைத்த காரியங்கள் கைகூடுவதற்கு சந்தர்ப்பங்கள் அமையும். தொழில் ரீதியான கொடுக்கல் வாங்கலில் சற்று எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. கடன் பிரச்சினைகள் படிப்படியாக குறையும். ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்வதன் மூலம் பொருளாதாரப் பிரச்சினையை எளிதாக சமாளிப்பீர்கள்.

தனுசு

தனுசு ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் இனம்புரியாத மகிழ்ச்சியுடன் காணப்படுவீர்கள். மனதிற்கு பிடித்தவர்கள் மூலம் இனிய செய்திகள் கிடைக்கப் பெறும். சுய தொழில் புரிபவர்களுக்கு புதிய விதிகளை கையாள்வதன் மூலம் முன்னேற்றம் பெருக்கி கொள்ள முடியும். குடும்பத்தில் இருக்கும் நபர்கள் உங்களை புரிந்து கொள்ளக் கூடிய சந்தர்ப்பங்கள் அமையும்.

மகரம்

மகர ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நினைத்ததெல்லாம் நடக்கும் நாளாக அமைய இருக்கிறது. எதிர்பாராத திடீர் தன வரவு திருப்தியை தரும். நிலுவையிலிருந்த பழைய பாக்கிகள் அனைத்தும் வசூலாகும். பொருளாதார ரீதியான முன்னேற்றம் சீராக இருக்கும். சுய தொழில் புரிபவர்களுக்கு லாபகரமான நாளாக அமையும். பூர்வீக சொத்துப் பிரச்சனைகள் முடிவுக்கு வரும்.

கும்பம்

கும்ப ராசிகாரர்களுக்கு இன்றைய நாள் எதிர்பார்ப்புகள் நிறைவேற தாமதம் ஆகும் வாய்ப்புகள் உண்டாகலாம். எடுக்கும் முயற்சிகளில் கவனம் தேவை. சகோதர சகோதரிகள் வழியே அனுகூலமான பலன்களை பெறலாம். சுய தொழில் புரிபவர்களுக்கு இதுவரை இருந்து வந்த பிரச்சனைகள் குறைந்து விடும். சிக்கனத்தை மேற்கொள்வதன் மூலம் பொருளாதாரப் பிரச்சினையை சமாளிக்கலாம்.

மீனம்
மீன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் சாதகமற்ற அமைப்பு என்பதால் எல்லா விஷயத்திலும் ஒருமுறைக்கு இருமுறை தீர ஆலோசித்த பின் முடிவெடுப்பது நல்லது. திருமண சுபகாரிய முயற்சிகளில் சற்று தள்ளிவைப்பது நல்லது. கணவன் மனைவி இடையேயான புரிதல் அதிகரிக்கலாம். முருக வழிபாடு செய்வது நன்மை தரும்.