இன்றைய ராசி பலன் – 25-12-2020

மேஷம்

மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எதிர்பார்ப்பதை விட கூடுதல் பலன்கள் கிடைக்கும். நீங்கள் நடக்கவே நடக்காது என்று நினைத்த விஷயங்கள் கூட நடைபெறுவதற்கு வாய்ப்புகள் உண்டு. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பணிச்சுமை கூடும் என்பதால் சற்று டென்சனுடன் காணப்படுவார்கள். சுய தொழிலில் எதிர்பார்த்த அளவிற்கு லாபம் கிடைப்பதில் இடையூறுகள் ஏற்படலாம்.

ரிஷபம்

ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் அதிர்ஷ்டம் தரும் அமைப்பாக இருப்பதால் திடீர் யோகம் ஏற்படலாம். ஒரு சிலருக்கு பணம் வரவு பல வழிகளில் வந்து பாக்கெட்டை நிரப்பும். உத்தியோகத்தில் உங்களை உணர்ச்சிவசப்படக் கூடிய காரியங்கள் நடை பெறுவதற்கு வாய்ப்புகள் இருப்பதால் எச்சரிக்கையுடன் இருந்து கொள்ளுங்கள். சுய தொழிலில் இருப்பவர்களுக்கு உடல் சோர்வு ஏற்பட வாய்ப்புகள் உண்டு.

மிதுனம்

மிதுன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உடல் ஆரோக்கியம் தொடர்பான விஷயங்களில் கூடுதல் கவனம் தேவைப்படும். சுவாச பிரச்சனைகள் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உள்ளன. குளிர்ச்சியான உணவுகளை தவிர்ப்பது உத்தமம். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு தலைவலி மண்டையைப் பிளக்கும் அளவிற்கு இருக்கும். சுய தொழிலில் எதிர்பார்த்த அளவிற்கு நல்ல முன்னேற்றம் இருக்கும்.

கடகம்

கடக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் சாதகமற்ற அமைப்பு என்பதால் எச்சரிக்கை தேவை. உத்தியோக ரீதியான பயணங்களில் கவனமுடனிருப்பது நல்லது. சுய தொழில் புரிபவர்களுக்கு வேலையாட்கள் மூலம் நல்ல லாபம் கிடைக்கும். உங்களின் நண்பர்கள் உங்களுக்கு உறுதுணையாக இருப்பார்கள். பெண்களுக்கு எலும்பு தொடர்பான பிரச்சினைகள் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் இருப்பதால் கவனம் தேவை.

சிம்மம்

சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் அதிர்ஷ்டமான நாளாக அமைய இருக்கிறது. திருமணம் போன்ற சுப காரிய முயற்சிகளில் உள்ளவர்களுக்கு அலைச்சல் இருந்தாலும் சிறப்பான வெற்றி கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு சக பணியாளர்களின் ஆதரவை கிடைப்பதில் மகிழ்ச்சியுடன் இருப்பீர்கள். சுய தொழிலில் இருப்பவர்களுக்கு திட்டங்கள் எல்லாம் வெற்றி அடையும்.

கன்னி

கன்னி ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உங்களுடைய எதிர்பார்ப்புக்கு எதிர் மாறாக அனைத்து விஷயங்களும் நடைபெறும். நீங்கள் நினைத்துக் கொண்டிருக்கும் விஷயங்களை செயல்படுத்துவதில் தோல்வி அடைவீர்கள். சுபகாரிய முயற்சிகளில் காலதாமதம் ஏற்படும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பணிச்சுமை கூடும். தொழில் மற்றும் வியாபாரத்தில் ஓரளவுக்கு சிறப்பான முன்னேற்றம் இருக்கும்.

துலாம்

துலாம் ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் சுமாரான பலன்களையே பெறுவீர்கள். சுபகாரியத் தடை நீங்கும். மனதிற்கு பிடித்தவர்கள் மூலம் நல்ல செய்திகள் கிடைக்கப் பெறுவீர்கள். கணவன் மனைவி இடையே தேவையற்ற கருத்து வேறுபாடுகள் வந்து செல்லும். பிள்ளைகளின் மூலம் நல்ல பலன்கள் உண்டு. ஒரு சிலருக்கு பூர்வீக சொத்துக்களில் இருந்து வந்த பிரச்சனைகள் தீரும்.

விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எதிர்பார்த்த அளவிற்கு லாபம் கிடை ப்பதில் இடையூறுகள் ஏற்படும். பொருளாதார ரீதியான சிக்கல்களை எதிர்கொள்ள போராடுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் பணம் விஷயத்தில் எச்சரிக்கையுடன் இருப்பது மிகவும் நல்லது. சுய தொழில் புரிபவர்களுக்கு பங்குதாரர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். பெண்களுக்கு இறைவழிபாடுகள் மீது ஆர்வம் மேலோங்கும்.

தனுசு

தனுசு ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் அமைப்புகள் சரியாக அமையாத காரணத்தினால் சில பிரச்சினைகளை சந்திப்பீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு எதிர்பாராத குழப்பங்கள் ஏற்படலாம். சரி எது தவறு எது என்று சிந்தித்து செயல்படுவது மிகவும் நல்லது. தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு புதிய ஒப்பந்தங்கள் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உண்டு.

மகரம்

மகர ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் இனிய நாளாக அமைய இருக்கிறது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு எடுத்த காரியங்களில் வெற்றி கிடைக்கும். உங்கள் திறமைக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் நன்மதிப்பை பெறுவதற்கு முயற்சி செய்வீர்கள். பெண்களுக்கு புதிய நண்பர்களின் அறிமுகம் கிடைக்கும்.

கும்பம்

கும்ப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நல்ல அமைப்பாக இருப்பதால் பிரச்சனைகள் நீங்கும். குடும்பத்தில் இருந்து வந்த குழப்பங்கள் நீங்கி குதூகலத்துடன் காணப்படும். சுபகாரிய விஷயங்களில் கலந்துகொள்ளும் யோகம் உண்டு. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பண ரீதியான சிக்கல்கள் நீங்கும். கடன் தொகைகள் படிப்படியாக குறைவதற்கு வாய்ப்புகள் உண்டு. தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.

மீனம்

மீன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் அதிர்ஷ்டமான நாளாக அமைய இருக்கிறது. இதுவரை நிலுவையில் இருந்த கடன் தொகைகள் வசூலாக கூடிய சந்தர்ப்பங்கள் அமையும். சொத்துக்கள் வாங்கும் மற்றும் விற்கும் விஷயங்களில் எதிர்பார்த்த அளவிற்கு சாதகப் பலன்கள் கிடைக்கும். ஒரு சிலருக்கு புதிய பொருள் சேர்க்கை உண்டாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். சுய தொழிலில் மந்த நிலை காணப்படும்.

x