இன்றைய ராசி பலன் – 24-12-2020

மேஷம்

மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் மற்றவர்களைப் பற்றிய பேச்சை குறைத்துக் கொள்வது மிகவும் நல்லது. கணவன் மனைவி இடையே அனுசரித்து செல்வது மன அமைதியை தரும். அரசாங்க காரியங்கள் அனுகூல பலன் தரும். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு கடின உழைப்பு தேவை. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு அடுத்தவர்களின் தொந்தரவுகள் குறையும்.

ரிஷபம்

ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நல்ல செய்திகள் கிடைக்கப் பெறுவீர்கள். குடும்பத்தில் இருப்பவர்களுக்கு தேவையான உதவிகளைச் செய்வீர்கள். கணவன் மனைவி இடையே மனம் விட்டு பேசுவது மிகவும் நல்லது. தொழில் மற்றும் வியாபாரத்தில் நீங்கள் தீட்டும் திட்டங்கள் வெற்றி தரும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பாராட்டு கிடைக்கப்பெறும்.

மிதுனம்

மிதுன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் சமூகத்தின் மீதான அக்கறை அதிகரிக்கும். மனதிற்கு பிடித்தவர்களை திடீரென சந்திக்கும் வாய்ப்புகள் அமையும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு எதையும் தன்னம்பிக்கையுடன் எதிர்கொள்ளும் தைரியம் பிறக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் எடுப்பவர்களுக்கு கூடுதல் பொறுப்புகள் அதிகரிக்கும். தெரியாத விஷயங்களில் ஆலோசனை தேவை.

கடகம்

கடக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் பயணங்களின் மூலம் அனுகூலமான பலன்கள் கிடைக்கப் பெறுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு இறை சிந்தனை அதிகரிக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் குடும்பத்தினரின் ஆதரவு கிடைக்கப் பெறும். உங்களுடைய வளர்ச்சிப்பாதையில் கணவன் அல்லது மனைவி உறுதுணையாக இருப்பார்கள்.

சிம்மம்

சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எதிர்பார்த்த அளவிற்கு நல்ல பலன்கள் கிடைப்பதில் இடையூறுகள் ஏற்படும். அடுத்தவர்களை நம்பி பொறுப்புகளை ஒப்படைக்காமல் நீங்களே செய்வது உத்தமம். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு தேவையில்லாத பிரச்சனைகள் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உண்டு. உத்தியோகத்தில் கடமையில் மட்டும் கவனமாக இருப்பது நல்லது.

கன்னி

கன்னி ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் சகோதர சகோதரிகளின் இடையே இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு சுறுசுறுப்புடன் பணிகளை செய்யும் சூழ்நிலை இருக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் புதிய அறிமுகங்கள் முன்னேற்றத்தை கொடுக்கும். பெண்களுக்கு தன்னம்பிக்கை அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் உண்டு.

துலாம்

துலாம் ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எதிர்பார்த்த அளவிற்கு பணவரவு திருப்தி தரும். பொருளாதார ஏற்ற இறக்கங்களை சுலபமாக சமாளிப்பீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு புதிய விஷயங்கள் தொடர்பான சில நுணுக்கங்களை கற்றுத் தேறுவதற்கான வாய்ப்புகள் உண்டாகும். தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல விஷயங்கள் எல்லாம் நடைபெறும்.

விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் குடும்பத்தினரின் ஆதரவு மன மகிழ்ச்சியைக் கொடுக்கும். உங்களுடைய சொல்லிற்கு மதிப்பு உண்டாகும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் வீண் விரயங்களை தவிர்த்து சிக்கனத்தை கடைபிடிப்பது மிகவும் நல்லது. தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்கள் மற்றவர்களைப் புரிந்து கொள்வதில் மென்மையான குணங்களை பெறுவீர்கள்.

தனுசு

தனுசு ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நீங்கள் இது வரை நடைபெற வேண்டும் என்று காத்துக் கொண்டிருந்த ஒரு விஷயம் நடைபெறும். கணவன் மனைவிக்கு இடையே இருந்த புரிதல் சிக்கல்களுக்கு உள்ளாகும். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு தங்களுக்கு கீழ் பணிபுரிபவர்களின் ஒத்துழைப்பு கிடைக்க பெறும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு திருப்தியான நாளாக அமையக்கூடும்.

மகரம்

மகர ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எதையும் பல முறை சிந்தித்து செயல்பட வேண்டும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு கவனக் குறைவு ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உண்டு. தொழில் மற்றும் வியாபாரத்தில் மந்த நிலை காணப்பட்டாலும் பொருளாதாரம் சீராக இருக்கும். கணவன் மனைவிக்கு இடையே இருந்த நெருக்கம் இன்னும் அதிகரிக்கும்.

கும்பம்

கும்ப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் கணவன் மனைவிக்கு இடையே சிறுசிறு ஊடல்கள் ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் உண்டு. நல்ல சூழ்நிலையில் ஒருவரை ஒருவர் மனம் விட்டு பேசிக் கொள்வது மிகவும் நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். மேல் அதிகாரிகளின் ஆதரவும் கிடைக்கப் பெறுவீர்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் புதிய முன்னேற்றம் இருக்கும்.

மீனம்

மீன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எவ்வளவு பணம் சம்பாதித்தாலும் அதற்கேற்ற செலவுகளும் வந்து சேரும். நீங்கள் ஒன்று நினைத்துக் கொண்டிருக்கும் பொழுது அது ஒன்றாக நடக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலையில் கவனம் தேவை. தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு உடல் சோர்வு ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உண்டு. உணவு கட்டுப்பாடு விஷயத்தில் கவனம் செலுத்தினால் மிகவும் நல்லது.

x