இன்றைய ராசி பலன் – 23-12-2020

மேஷம்

மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் பல்வேறு பிரச்சனைகளை எதிர் கொள்வதற்கான தைரியம் பிறக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நண்பர்களின் ஆதரவு கிடைக்கும். தொழில் மற்றும் வியாபார ரீதியான போட்டி பொறாமைகள் குறையும். ஆரோக்கியம் சீராக இருக்கும்.

ரிஷபம்

ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் சிறப்பான நாளாக அமைய இருக்கிறது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பணியில் கூடுதல் பொறுப்புகள் இருக்கும். தொழில் மற்றும் வியாபார ரீதியான முன்னேற்றத்தில் சில தடைகள் வந்து நீங்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி மற்றும் அமைதி நிறைந்து இருக்கும்.

மிதுனம்

மிதுன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நிதானத்துடன் செயல்பட வேண்டிய நாளாக இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பணிச்சுமை அதிகரித்தாலும் புதிய விஷயங்களை கற்றுக் கொள்வதற்கான வாய்ப்புகள் உண்டாகும். தொழில் மற்றும் வியாபாரத்தில் நீங்கள் எதிர்பார்த்த லாபம் இருக்கும்.

கடகம்

கடக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் திடீர் தனவரவு மகிழ்ச்சியை உண்டாக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு தேவையற்ற அலைச்சல்கள் ஏற்பட வாய்ப்புகள் உண்டு. தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு வீண் விரயங்கள் ஏற்படுவதற்கான சாத்தியக் கூறு உண்டு என்பதால் எச்சரிக்கை தேவை.

சிம்மம்

சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எதிர்பார்த்த அளவிற்கு நினைத்த விஷயங்கள் நடைபெறுவதற்கான சாத்தியக்கூறுகள் உண்டு. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு சக பணியாளர்கள் ஒத்துழைப்பு கொடுப்பார்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் நீங்கள் எடுக்கும் முடிவுகள் வெற்றி அடையும்.

கன்னி

கன்னி ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உங்களுடைய கவனம் முழுவதும் பெறுவதற்கான வாய்ப்புகள் உண்டு. தொழில் மற்றும் வியாபார ரீதியான கொடுக்கல் வாங்கல் விஷயத்தில் எச்சரிக்கை தேவை. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மேலதிகாரிகளின் தொந்தரவு குறையும். ஆரோக்கியத்தில் கவனம் தேவை.

துலாம்

துலாம் ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் இதுவரை இருந்து வந்த குழப்பங்கள் நீங்கி தெளிவு பிறக்கும் அற்புதமான நாளாக இருக்கிறது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு புதிய நண்பர்களின் அறிமுகம் கிடைக்கும். தொழில் மற்றும் வியாபார ரீதியான விஷயங்களில் பெரிய மனிதர்களின் ஆதரவு கிடைக்க வாய்ப்புகள் உண்டு.

விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் கூடுதல் பொறுப்புகள் அதிகரிக்க வாய்ப்புகள் உண்டு. உத்தியோகத்தில் இருப்பவர்கள் தகுதிக்கு மற்றும் திறமைக்கு ஏற்ப பதவி உயர்வுகள் கிடைப்பதற்கான சாத்தியக்கூறுகள் உண்டு. தொழில் மற்றும் வியாபாரத்தில் மந்த நிலை காணப்படும்.

தனுசு

தனுசு ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நீங்கள் எதிர்பார்க்காத சில விஷயங்கள் நடைபெறுவதற்கான வாய்ப்புகள் உண்டு. குடும்பத்தில் கணவன் மனைவிக்கிடையே இருந்த அன்னோன்யம் அதிகரிக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு இனிய நாளாக அமையும். தொழில் மற்றும் வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைப்பதில்லை ஏமாற்றம் இருக்கும்.

மகரம்

மகர ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நீங்கள் எதிர்பார்க்கும் நல்ல நிகழ்வுகள் நடை பெறுவதற்கான வாய்ப்புகள் உண்டு. வேலை இல்லாதவர்களுக்கு மனதிற்குப் பிடித்த நல்ல வேலை அமையும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு சுமூகமான சூழ்நிலை காணப்படும். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு புதிய முயற்சிகள் கைகொடுக்கும்.

கும்பம்

கும்ப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் கவலைகள் நீங்கி தெளிவு பிறக்கும். எதையும் தன்னம்பிக்கையுடன் எதிர்கொள்வதற்கான வாய்ப்புகள் உண்டு. பெண்களுக்கு யோகம் தரும் நாளாக அமையும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நண்பர்களின் ஆதரவு கிடைக்கும். சக பணியாளர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். சுய தொழிலில் முன்னேற்றம் இருக்கும்.

மீனம்

மீன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நீங்கள் எடுக்கும் முயற்சிகளில் காலதாமதமானாலும் வெற்றி கிடைக்கும். திருமணம் போன்ற சுபகாரிய முயற்சிகளில் ஈடுபட்டு உள்ளவர்களுக்கு நல்ல செய்தி கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பணிச்சுமை அதிகரிக்கும். சுய தொழிலில் எதிர்பார்த்த அளவிற்கு லாபம் கிடைப்பது இடையூறுகள் ஏற்பட வாய்ப்புகள் உண்டு.

x