Traffic Bot

இன்றைய ராசி பலன் – 19-12-2020

மேஷம்

மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நீங்கள் நினைத்தது அப்படியே நடக்க கூடிய அற்புதமான நாளாக அமைய இருக்கிறது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பணிச்சுமை கூடும் என்பதால் சரியான திட்டமிடலை மேற்கொள்வது மிகவும் நல்லது. சுய தொழிலில் இருப்பவர்கள் கூடுதல் செலுத்துவது உத்தமம். பெண்களுக்கு இனிய நாளாக அமையும்.

ரிஷபம்

ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் கவனத்துடன் செயல்பட வேண்டிய நாளாக அமைய இருக்கிறது. உத்தியோகத்தில் இருப்பவர்கள் திடீர் பிரயாணங்களை மேற்கொள்வதற்கான வாய்ப்புகள் உண்டு. வாகன பயணத்தில் கூடுதல் கவனம் தேவை. சுய தொழிலில் இருப்பவர்கள் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை உயர சில உத்திகளை கையாள்வது நல்லது. பெண்களுக்கு மன குழப்பம் அதிகரிக்கும்.

மிதுனம்

மிதுன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் அற்புதமான நாளாக அமைய இருக்கிறது. நீண்ட நாள் கனவுகள் நிறைவேறக் கூடிய யோகம் வரலாம். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு சக பணியாளர்களின் ஆதரவு கிடைப்பதில் இடையூறுகள் ஏற்படும். சுய தொழிலில் இருப்பவர்கள் நல்ல லாபம் காண்பீர்கள். பெண்களுக்கு உடல் சோர்வு அதிகரிக்கும்.

கடகம்

கடக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் யோகமான நாளாக அமைய இருக்கிறது. உங்களுடைய இரக்க குணத்தால் எதிர்கொள்ளும் பிரச்சனைகளை எளிதாக சமாளிப்பீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மேலதிகாரிகளின் தொந்தரவு வெறுப்பை உண்டாக்கும். சுய தொழிலில் இருப்பவர்கள் கூடுதல் முதலீடுகள் செய்து லாபம் காணலாம். பெண்கள் இறை வழிபாட்டில் ஆர்வம் செலுத்துவது மிகவும் நல்லது.

சிம்மம்

சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் பெரும் புண்ணியத்தை சேர்த்துக் கொள்ளக் கூடிய அற்புதமான நாளாக அமைய இருக்கிறது. உங்களுக்கு பெரிய மனிதர்களின் ஆதரவும் கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மேலதிகாரிகளின் மூலம் நன்மைகள் நடைபெறும் வாய்ப்புகள் உண்டு. சுயதொழிலில் இருப்பவர்களுக்கு பணியாளர்களை அனுசரித்து செல்வதன் மூலம் ஏற்றம் பெறலாம். பெண்களுக்கு புதிய பொருள் சேர்க்கை உண்டாகும்.

கன்னி

கன்னி ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் சற்று நிதானத்துடன் செயல்பட வேண்டியது அவசியமாக இருக்கும். குடும்பத்தில் கணவன் மனைவிக்கு இடையே இருக்கும் கருத்து வேறுபாடுகள் வலுவாக வாய்ப்புகள் உண்டு. சுயதொழிலில் ஏற்றத்துடன் எதிர்பார்க்கும் லாபம் கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மன அமைதி கிடைக்கும். பெண்களுக்கு புதிய நட்புகள் கிடைக்கலாம்.

துலாம்

துலாம் ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நீங்கள் எடுக்கும் முயற்சிகளில் கால தாமதம் ஏற்படலாம். திருமணம் போன்ற சுபகாரிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு திடீர் அதிர்ஷ்டங்கள் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உண்டு. சுய தொழிலில் எதிர்பார்த்த அளவிற்கு லாபம் கிடைக்காவிட்டாலும் பெரிதாக பிரச்சனைகள் ஒன்றும் இருக்காது.

விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் சாதகமான அமைப்பு என்பதால் எதிர்வரும் துயரங்களை எளிதாக முறியடிப்பீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலைப்பளு இருந்தாலும் பணியில் சிறப்பாக செய்து பாராட்டுகளைப் பெறுவீர்கள். சுய தொழிலில் எதிர்பார்த்த லாபம் இருக்கும். பெண்களுக்கு திடீர் அதிர்ஷ்டம் ஏற்படும்.

தனுசு

தனுசு ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உங்களுடைய தன்னம்பிக்கையும், தைரியமும் அதிகரிக்க கூடிய வாய்ப்புகள் உண்டு. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு எதிர்பார்க்கும் பதவி உயர்வு, ஊதிய உயர்வு கிடைப்பதில் சாதகமான பலன்கள் உண்டு. தொழில் மற்றும் வியாபாரத்தில் புதிய முதலீடுகள் செய்வதன் மூலம் நன்மைகள் பெறலாம். பெண்களுக்கு ஆடை சேர்க்கை ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உண்டு.

மகரம்

மகர ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எதிர்பார்த்த பணவரவு கிடைப்பதில் சிறப்பான பலன்கள் இருக்கும். பொருளாதாரத்தில் ஏற்ற இறக்கங்கள் இருந்தாலும் குடும்ப தேவைகளை பூர்த்தி செய்துவிடுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு எதிர்பார்த்த இடமாற்றம் உண்டாகும். சுய தொழிலில் இருப்பவர்கள் மந்தநிலை காண்பீர்கள். பெண்களுக்கு தன்னம்பிக்கை அதிகரிக்கும்.

கும்பம்

கும்ப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நீங்கள் எதிர்பார்ப்புகள் அனைத்தும் நீங்கள் எதிர்பார்த்த வற்றிற்கு எதிர்மாறாக நடக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நீங்கள் ஒன்று நினைக்க அது ஒன்று நடக்கும். சுய தொழிலில் இருப்பவர்கள் வாடிக்கையாளர்கள் இடத்தில் நன்மதிப்பை பெறுவீர்கள். குடும்பத்தில் ஒற்றுமை அதிகரிக்கும். கணவன் மனைவியிடையே அன்யோன்யம் அதிகரிக்கும்.

மீனம்

மீன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எதிலும் நிதானம் தேவை. உங்களுடைய முன்கோபத்தால் தேவையற்ற இழப்புகளை சந்திக்கலாம். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு கூடுதல் பணிச்சுமை காரணமாக உடல் சோர்வு ஏற்படும். சுய தொழிலில் இருப்பவர்கள் தங்களுக்கு கீழ் பணிபுரிபவர்களை அனுசரித்துச் செல்வதால் முன்னேற்றம் பெறலாம். பெண்களுக்கு எதிர்பாராத வகையில் மாற்றங்கள் ஏற்படும்.

இன்றைய ராசி பலன் அனைவருக்கும் சிறப்பாய் இருக்க வாழ்த்துக்கள்.

x