இன்றைய ராசி பலன் – 17-12-2020

மேஷம்

மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் இனிய நாளாக அமைய இருக்கிறது. குடும்பத்தில் இருப்பவர்களுடன் பேச்சு கனிவை காட்டினால் மன அமைதி கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு இடமாற்றம் தொடர்பான விஷயத்தில் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு புதிய முயற்சிகள் வெற்றியடையும்.

ரிஷபம்

ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் கணவன் மனைவிக்கு இடையே இருந்து வந்த கசப்பு நீங்கும். ஒருவரை ஒருவர் புரிந்து கொள்வதற்கான சந்தர்ப்பங்கள் கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வீண் அலைச்சல் ஏற்படலாம். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு பணிச்சுமை காரணமாக சில உடல் உபாதைகள் ஏற்படலாம். எனவே எச்சரிக்கை தேவை.

மிதுனம்

மிதுன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நீங்கள் மனதில் நினைத்துக் கொண்டிருக்கும் விஷயங்கள் பற்றிய சிந்தனையில் ஆழ்ந்து இருப்பீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலைப்பளு கூடுதலாக அமையும். குடும்பத்தில் அமைதி குறைவதற்கான வாய்ப்புகள் இருப்பதால் பொறுமையை கையாளுவது நல்லது. ஆரோக்கியம் சீராக இருக்கும்.

கடகம்

கடக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் வெற்றி தரும் நாளாக இருக்கும். குடும்பத்தில் இருப்பவர்களுக்கு நண்பர்கள் மற்றும் உறவினர்களின் ஆதரவு கிடைக்கும். பொருளாதாரத்தில் இருக்கும் ஏற்ற இறக்கங்களை திறம்பட சமாளிப்பீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு கிடைக்கும் வாய்ப்புகளை பயன்படுத்தி கொள்வது நல்லது. தொழிலில் சிறந்து லாபம் காண்பீர்கள்.

சிம்மம்

சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் வெளியூர் தொடர்பான விசயங்களில் சாதகமான பலன்கள் கிடைக்கும். வேலை தேடி அலைந்து கொண்டிருப்பவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். கணவன் மனைவியிடையே சிறுசிறு வாக்குவாதங்கள் ஏற்படலாம். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு தன வரவு சிறப்பாக இருக்கும். தொழில் மற்றும் வியாபாரம் செய்பவர்களுக்கு எடுத்த காரியங்களில் வெற்றி கிடைக்கும்.

கன்னி

கன்னி ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் சுயதொழில் செய்பவர்களுக்கு கொடுக்கல் வாங்கல் தொடர்பான விஷயத்தில் நல்ல பலன்கள் கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நண்பர்களின் ஆதரவு கிடைக்கும். பணியாளர்களின் ஒத்துழைப்பு மனதிற்கு மகிழ்ச்சியை அளிக்கும். குடும்பத்தில் இருக்கும் மூத்த நபர்களை அனுசரித்து செல்வது மிகவும் நல்லது.

துலாம்

துலாம் ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நல்ல நாளாக அமைய இருக்கிறது. கணவன் மனைவியின் ஒற்றுமை சிறப்பாக இருக்கிறது. குடும்ப விஷயங்களை மற்றவரிடம் பகிர்ந்து கொள்ளாமல் இருப்பது உத்தமம். திருமணம் போன்ற சுப காரிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். மனதிற்கு பிடித்தவர்கள் மூலம் நல்ல செய்திகள் கிடைக்கும். ஊதியம் தொடர்பான விஷயத்தில் நல்ல பலன் கிடைக்கும்.

விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நன்மைகள் அதிகரிக்கக் கூடிய வாய்ப்புகள் உண்டு. எடுக்கும் முயற்சிகளிலும் சாதகப் பலன்கள் கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு புதிய விஷயங்களை கற்றுக் கொள்வதற்கான வாய்ப்புகள் உண்டாகும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உங்களுக்கு இருந்து வந்த பகைவர்கள் தொல்லை நீங்கும்.

தனுசு

தனுசு ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் கூடுதல் பொறுப்புகள் அதிகரிக்கும் வாய்ப்புகள் உண்டு. குடும்பத்தில் இருக்கும் ஒரு சிலர் உங்களை புரிந்து கொள்ளாமல் போகலாம். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மன உளைச்சல் ஏற்பட வாய்ப்புகள் உண்டு. தொழில் மற்றும் வியாபார ரீதியான முன்னேற்றம் சிறப்பாக அமைய தட்டிக்கொடுத்து வேலை வாங்குவது உத்தமம்.

மகரம்

மகர ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள புதிய பொருள் சேர்க்கை உண்டாகும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் வாகன ரீதியான பயணங்களில் கூடுதல் கவனத்துடன் இருப்பது நல்லது. பொருளாதாரத்தில் இருக்கும் ஏற்ற இறக்கங்கள் எளிதாக சமாளிப்பீர்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் எதிர்பார்த்த அளவு லாபம் கிடைக்கும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை கூடுதல் கவனம் மிகவும் அவசியம். ஒரு சிலருக்கு எலும்பு தொடர்பான பிரச்சினைகள் ஏற்படலாம்.

கும்பம்

கும்ப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் இனிய கிடைக்கப்பெறும். திருமணம் போன்ற சுப காரிய முயற்சிகளில் வெற்றி உண்டாகும். தொழில் மற்றும் வியாபாரத்தில் ஏற்றமிகு சூழ்நிலை காணப்படும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மேலதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். தொழில் நுணுக்கங்களை கற்றுக் கொள்வதற்கான வாய்ப்புகள் உருவாகும். குடும்பத்தில் உங்களின் அதிகாரத்திற்கு மற்றவர்கள் செவி சாய்ப்பார்கள்.

மீனம்

மீன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் சாதகமற்ற சூழ்நிலையில் இருந்தாலும் தன்னம்பிக்கையுடன் செயல்படுவீர்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் பொருளாதார ரீதியான பிரச்சனைகளை திறம்பட சமாளித்து வெற்றி காண்பீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு எடுக்கும் முயற்சிகளில் காலதாமதமானாலும் வெற்றி கிடைக்கும். தொழில் ரீதியான பயணத்தில் அனுகூலமான பலன்கள் உண்டு.

x